அணியிலக்கணம்418
இந் நூற்பாவில் கற்பனை என்ற சொல், அணி என்ற பொருளிலேயே ஆளப்பட்டது. சிலர் என்றது அணி நூலாசிரியர்களை. ஒரு புலவன் தன் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளியீடாகக் கவிதை புனைகிறான். இன்னஇன்ன அணிகள் அமைய வேண்டும் எனச் சிந்தித்துக் கவிபாடுவதில்லை. கவிஞர்களின் இலக்கியங்களைத் தொகுத்து ஏதோ ஒரு வகையாற் பாகுபடுத்தி அணியிலக்கணம் கூறப்படுகிறது. இத்தொகுப்பும் பாகுபாடும் அவ்விலக்கண ஆசிரியனின் சொந்தக் கண்ணோட்டத்தோடடேதான் நடைபெறுகிறது. பெயர்க்குறியீடும் அவனுடையதே. இவை அனைத்தையும் உள்ளடக்கி “அப்பெயரும் கற்பனை” என்றார். பெயரும் என்பதிலுள்ள எச்சஉம்மை அணிகளின் பாகுபாட்டைத் தழுவியது.
(614)
82.கற்பனை மீதொரு கற்பனை கூறுதல்
 இயல்புஎனக் காண்கிலம்; எங்ஙனம் அவற்றிற்கு
 இசைய லாகும்என்று எண்ணுநர் சிலரே.
ஒருவகையாகக் கற்பனை செய்துவிட்டு அதன்மீது பிறிதொரு கற்பனையை ஏற்றிக் கூறுதல் பொருந்துவதாகத் தெரியவில்லை. இத்தகைய இலக்கிய உத்தியை எவ்வாறு ஏற்றுக்கொள்ளுவது எனத் தயங்கும் புலவரும் சிலர் உளர் என்றவாறு.
ஒரு கற்பனையோடு வேறான மற்றொன்றை இணைக்கும் பொழுது அவற்றிடையே பொதுத்தன்மையைவிட வேற்றுத் தன்மையே மிகுதிப்பட்டு, ஒருமுகப்பட்ட காவிய ஈடுபாட்டைக் கெடுத்துவிட வாய்ப்புண்டு. இது பற்றியே போலும் உவமைக்கு உவமை கூறக்கூடாதென்ற விதியும், (“உவமைக்கு உவமை வழுஎன மொழிப”1 ஓரிடத்தில் காணப்படுகிறது.
(615)
83.வியனுற விளம்பிடல் அனைத்தும் கற்பனை
 என்னும் புலவோர் எமக்குஇனி யாரே.