படிப்பவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் கூறப்படுவனயாவும் கற்பனையேயாகும் எனக் கருதுகின்ற அறிஞர்கள் எம்மால் பாராட்டத்தக்கவராவர் என்றவாறு. |
|
கற்பனையின் பயன் கற்பவர்க்கு வியப்பு அளிப்பதாகும். இவ்வியப்பே காவியச்சுவையாம். இப்பயனைத் தருவன அனைத்தையும் கற்பனையாகவே கருதலாம் என்ற கருத்து இங்கு கூறப்பட்டது. (616) |
84. | கற்பனை நிலைஇவண் கழறினம்; அடுத்துஇனி | | நிகழ்ச்சி இயல்பினை நிகழ்த்துதும் சிறிதே. |
|
கற்பனையின் நிலையை இவ்வாறு கூறிமுடித்தோம். இனித் தொடர்ந்து நிகழ்ச்சிகளின் இயல்புகளைக் கொஞ்சம் கூறுவாம் என்றவாறு. |
இந் நூற்பாவால் இப் பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்ததற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்படுகிறது. (617) |
IV. நிகழ்ச்சி இயல்பு |
இப் பிரிவில் எந்தஎந்தக் காலத்தில் என்னென்ன இயற்கைச் செயல்கள் நடைபெறும் என்பன தொகுத்துரைக்கப்படுகின்றன. சிறுபொழுது, பெரும்பொழுது ஆகிய இரண்டும் இடம்பெறுவதுடன் நல்லாட்சிக்காலம், கொடுங்கோன்மைக் காலம் பற்றியும் கூறப்படுகிறது. இவ்வியல்பு 13 நூற்பாக்களை உடையது. |
அதிகாலை85. | வைகறை நிகழ்வன சேவற் றொனியும், | | காகம் ஆந்தைக் கதறலும், வலியான் | | இசையும், கூகையும் கள்வரும் இருப்பிடம் | | தேடலும், காளையர் சிறுமியர் எனும்இவர் | | பிரிவது கருதிப் பெருமூச் செறிதலும் | | வைதிக நெறியினர் மகிழ்ச்சியும் பிறவுமே. |
| | |