அறுவகையிலக்கணம்423
பேயர், அரக்கர், நாகர் முதலியவர்கள் மகிழ்ச்சியோடு திரிதல், இத்துணை என்று கணக்கிட்டுச் சொல்லமுடியாத உயிரினங்கள் அனைத்தும் துயிலில் தம்மை மறத்தல், காசாம்பூ விரிதல், நொச்சிப்பூ உதிர்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நள்ளிரவுக்கு உரியனவாகும் என்றவாறு.
ஒரு நாளின் 5 சிறுபொழுது நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறிய இவர் அடுத்து நான்கு பெரும் பொழுதுக்குரியன வற்றைக் கூறத் தொடங்குகிறார்.
(622)
இளவேனிற்காலம்
90.தென்றல் உலவலும், தேமா வகுளம்
 ஆதிய பூத்தலும், அன்றிலும் குயிலும்
 கூவலும், கொங்கை குளிர்தலும், கலவ
 மயிலினம், வாடலும், வாவியும் நதியும்
 வறத்தலும் பிறவும் வசந்த காலத்
 தன்மை யாம்எனச் சாற்றினர் புலவோர்.
தென்றல் வீசுதல், இனிய மா மரங்களிலும் மகிழ மரங்களிலும் மலர்கள் நிறைதல், அன்றிற்பறவைகளும் குயில்களும் கூவுதல், மங்கையர்களின் நகில்கள் குளிர்ச்சியைத் தருதல், தோகை மயில்கள் வெப்பந்தாங்காது வருந்துதல், குளம் யாறு முதலிய நீர்நிலைகள் வறண்டு போதல் ஆகியனவும் மற்றும் வேறுபலவும் இளவேனிற் காலத்திற்குரிய பண்புகள் என்று அறிஞர் சொல்வர் என்றவாறு.
இளவேனில் என்பது சித்திரை வைகாசி மாதங்கள். “வாவிஉறை நீரும் வடநிழலும் பாவு அகமும் ஏஅனைய கண்ணார் இளமுகையும் - ஓவியமே மென்சீத காலத்து வெம்மை தரும்; வெம்மைதனில் என்புஆரும் சீதளம்ஆ மே”1 என்பதை நினைந்து கொங்கை குளிர்தலும் என்றார்.
மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப வேனிலானே தண்ணியள்; பனியே வாங்கு