அணியிலக்கணம்424
கதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்குவெயிற் பொதிந்த தாமரை உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே”1 என்றது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
(623)
முதிர்வேனிற்காலம்
91.நவ்வலும் தாழையும் நலங்கொடு குலவலும்,
 பட்டமும் கறங்கும் பரவலும், பஞ்சென
 வெளிறிய முகிலினம் வெருவி ஓடலும்,
 காகம் ஆதிய கடலிடை வருந்தலும்,
 கொட்டிலும் சோலையும் குடையும் குன்றலும்,
 மாழை உலகமும் மண்ணுலகு ஆதலும்
 ஆதிய காற்றுக் காலத்து அணிகளே.
நாவற்பழமும் தாழம்பூவும் சிறப்பாக விளங்குதல், சிறுவர் விளையாட்டாகிய காற்றாடி, பம்பரம் ஆகிய இரண்டும் அதிகமாதல், பருத்தியைப் போன்று வெண்மைநிறம் பெற்ற மேகக்கூட்டங்கள் பயந்து ஓடுவதைப்போன்று வேகமாக இயங்குதல், காகம் முதலிய பறவைகள் பெருங் காற்றால் கடற் பக்கமாக அடித்துச் செல்லப்பட்டு வருந்துதல், பால்வளம் குறைதல், சோலைகள் சூறாவளியில் சீரழிதல், காளான்கள் பறித்தெறியப்படுதல், பொன்னுலகு எனப்படும் வானுலகமும் பூமியிலிருந்து மேலெழும்பும் மண் படிந்து, அதனால் மண்ணுலகாகத் தோற்றமளித்தல் போன்றவை காற்றுக்காலமாகிய முதுவேனிலில் நிகழ்வனவாம் என்றவாறு.
கொட்டில் பசுக்களை உணர்த்தி மறுபடியும் பாலை உணர்த்தி மீட்டும் அதனால் பெறப்படும் வருவாயை உணர்த்தலின் மும்மடி ஆகுபெயர். காற்றுக் காலத்தில் பசுக்களின் பால் குறைதல் வெளிப்படை. குடை என்ற ஒரு காளானின் பெயர் உபலட்சணமாக அவ்வினம் முழுவதற்கும் கொள்ளப்பட்டது.