குயில் மெலிதல் - “காரினங்கள் துன்னும் பொழுதிற் குயில் போல் துணுக்குற்று”1 |
“கருங்குயில் கையற மாமயில் ஆல பெருங்கலி வானம் உரறும்”2 என இவை இரண்டும் சேர்த்துக் கூறப்பட்டது. |
குரங்கு மெலிதல் - “மாமேயல் மறப்ப, மந்தி கூர, பறவை படிவன வீழ, கறவை கன்றுகோளொழியக் கூடிய வீசி குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள்”3 |
பாம்பு மெலிதல் - “மாரிநாட் புற்றுறை அரவெனப் புழுங்குநெஞ்சினான்”4 |
தனம்தொறும் வெப்பம் தழைத்தல் - முன்னால் 623ஆம் நூற்பா உரை காண்க. |
குளிர்காய்தல்-“யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர”5 |
கார்காலம் என்பது ஆவணி புரட்டாசி மாதங்கள். (625) |
பனிக்காலம் |
93. | கமலம் ஆதிய கருகலும், ஆறுகொடு | | மூங்கில் ஆதிய முத்துஅணி காட்டலும், | | வெண்சுடர் இகழ்ச்சியும் வெய்யோன் புகழ்ச்சியும் | | காமக் கடலும் கரைபிறழ்ந் திடலும், | | முயலினம் மகிழ்தலும், மொழிவன பிறவும் | | பனியால் நிகழ்வன என்றனர் பாவலர். |
|
|