அறுவகையிலக்கணம்427
தாமரை முதலிய நீர்ப்பூக்கள் கருகிப்போதல், அறுகு முதலிய புல்லினங்கள் மற்றும் மூங்கில் இலைகளின்மீது முத்துகளைப் போன்று (காலை நேரத்தில்) பனித்துளிகள் காட்சியளித்தல், (குளிரின் மிகுதி பற்றி) நிலவைப்பழித்து ஒதுக்குதல், (இதமாக இருப்பதால்) வெய்யிலைப் போற்றுதல், காம உணர்ச்சி மிகுதல், முயல்கள் உவகையை அடைதல் ஆகியனவும் இக்காலத்தில் நிகழ்வதாகச் சொல்லப்படும் இன்னபிறவும் பனியால் நேர்வனவாம் என்று புலவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
தாமரை வாடுதல்-நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேற்பணி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ”1
அறுகொடு மூங்கிலில் முத்து - “நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்பத் தாளித்தண்பவர் நாள் ஆ மேயும் பனிபடு நாளே”2
(626)
94.செங்கோல் மன்னனும் சீரிய குரவனும்
 வளர்நாள் உலகிடை வண்மை யாவும்
 பெருகும்என்று உணர்ந்தோர் பேசினர் அன்றே.
அறநெறி பிறழாமல் ஆட்சி புரியும் அரசனும் கல்வி, அநுபவஞானம், ஒழுக்கம், அருள் ஆகியவைகளாற் சிறந்த ஆசானும் வாழும் காலத்தில் உலகத்தில் எல்லா வகையான வளங்களும் பெருகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர் என்றவாறு.
“ஆர்க்கும்மணி முற்றத்தான் ஆளும்நாள் அம்புவியில் யார்க்கும்ஒரு தீங்கும் இரா”3 என்று இவர் செங்கோற் சிறப்பைப் பிறிதோரிடத்திலும் கூறியுள்ளார்.