கேட்பவருக்கு இனிமை பயக்குமாறு ஒரு செய்தியை எடுத்துக் கூறுதலும், கேட்பவர்கள் விரும்பிய வண்ணம் பொருளை முற்றுவித்துக் காட்டலும் கவிஞர்க்குச் சிறப்பாகும் என்று உலகினர் உரைப்பர் என்றவாறு. |
“செத்தார் உய்யினும் தீஞ்சுவை இல்லாப் பாடலின் மருளாப் பான்மையர் சிலர்”1 உளராகலின் சுவைமிகச் சொல்லல் இன்றியமையாததாம். கொடுத்த பொருளைக் கொடுத்த யாப்பு, நேரம் அல்லது சொற்றொடர் கொண்டு முடித்துக் காட்டுதலைச் சொற்படி முடித்தல் என்றார். இனி புலவன் தெய்வ உபாசனையால் வாக்குப்பலிதம் பெற்றுத் தான் சொன்னவற்றை நிகழ்த்திக்காட்டுதல் எனினும் அமையும். இவர் இக்கொள்கையினரே. “கால மழையெனப் புதுக்கவி கழறலும் சொற்படி நடக்கக் காண்டலும் பிறவும் தெய்வத் தன்மைப் புலமை யாமே”2 “உன்னிய கருமம் உடனே முடிக்கும் புலமை உடையான் புயங்க மன்அனையான் என்ன மூதுலகே இயம்பு மன்றே”3 “வண்ணக் கவிப்புலவன் ஆனாலும் வாக்குவலி நண்ணப் பெறினே நலம்”4 என்பன போலப் பல இடங்களில் இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். (634) |
102. | உலகெலாம் புரக்கும் ஒருவன் உந்திஅம் | | தாமரை பயந்த சதுமுகன் பகர்நூல் | | பைம்புல் தின்னும் பசுமுதல் பல்உயிர்க் | | கொன்றுவெந்து அருந்தக் கூறாது என்னும் | | உண்மைநன்கு உணர்கை உயர்குலத்து உள்ளார்க்கு | | ஆக்கம் ஆகும்என்று அறிவது கடனே. |
|
திருமால் உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காத்தருள்பவர். அவருடைய கொப்பூழிலிருந்து வந்த தாமரை மலரில் தோன்றியவன் பிரமதேவன். (இவ்வாறு உயிர்களைக் காக்கும் கடவுளின் மகனாகத் தோன்றிய) பிரமன் தான் இயற்றிய நூலாகிய வேதத்தில் பசிய புல்லைத் தின்று வாழும் பசு |
|