| முதலிய தீமையற்ற பல உயிர்களை வேள்வி என்ற பெயரால் கொலை செய்து வேகவைத்து உண்பதை விதிக்கமாட்டான் என்னும் புத்திபூர்வமான சத்தியத்தைச் சற்றும் ஐயத்திற்கே இடமில்லாமல் உளங்கொள்ளுதல் அந்தணர்க்குச் சிறப்பாகும் என அறிதல் கடமையாகும் என்றவாறு. | 
	| வேள்விக்கொலை பற்றிய இவர் கொள்கை முன்னால் 347ஆம் நூற்பா உரையில் காட்டப்பட்டது. “அரு நோன்பு கொன்றுஅருந்தி டாமைஎனச் சொன்ன திருநூலை விட்டுச் சிலர்தம் - தருநாடு கொள்வேம் என்று எண்ணிக் கொலை முயன்று ஊன் உண்கின்றார் எள்வேம் அவரைநித்தம்யாம்”1 “வேதம் கொல்வேள்வி விதிக்கும்என நம்பும்அவர் போதங்கள் அத்தனையும் பொய்”2 என்றெல்லாம் இக் கொள்கை இவரால் மிகப்பல இடங்களில் அழுத்தமாக வலியுறுத்தப் பட்டுள்ளது. (635) | 
| | 103. | சிட்டரைச் சேர்த்தலும், துட்டரைச் செகுத்தலும், |  |  | மற்றோர் வேந்தனை வணங்காக் கொற்றமும், |  |  | அச்ச மின்றி அனைவரும் காண்டற்கு |  |  | எளியன் ஆகி, இறுமாப்பு ஒழித்து, |  |  | நெறிவழாஅது ஒழுகல் ஆதியும் நெடுவேல் |  |  | மன்னருக்கு ஆக்கம் என்றனர் வல்லோர். | 
 | 
	| சான்றோர்களைத் தன்னோடு இணைத்துக்கொள்ளுதல், தீயவர்களைத் தண்டித்தல், பிற அரசர்களைப் பணிந்து திறை செலுத்தாத தனி ஆட்சி, தன் குடிமக்கள் அனைவருக்கும் சுலபமாகவும் அஞ்சாதும் நேரில் காண வாய்ப்பளித்தல், அகந்தை இல்லாதிருத்தல், செங்கோன் முறைக்கு மாறுபடாது பொது வாழ்விலும் தனி வாழ்க்கையிலும் ஒழுகுதல் முதலியன நெடிய போர்ப்படைகளை உடைய மன்னர்களுக்குச் சிறப்பான வையாம் என்று கல்வியிற் சிறந்தவர்கள் கூறியுள்ளனர் என்றவாறு. | 
	| “தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை”3 “கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் | 
|