ஈடுபட்டு நன்கு உழைக்கின்ற பிற கலைஞர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அங்ஙனம் செய்யாமல் பொருளைக் கலைஞர்கள் பலர்க்கும் பயன்படுமாறு பரவலாக வழங்க வேண்டும் என்ற அறிவுரை “களிறு எனச் சிததல்” என்ற சிறந்த உவமையால் பெறப்படுகிறது. “காரியம் அறிந்து” என்றதால் செல்வர்கள் வெறும் முகஸ்துதியால் மயங்கிவிடக் கூடாது என்பதும், தாம் வழங்கும் பொருள் உண்மையாகவே தகுந்த பாத்திரத்தைச் சென்று அடைகிறதா எனத்தெரிந்து கொள்ளவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. (637) |
105. | ஊக்கமும் முன்பின் உறுவன உணர்தலும் | | பகிர்ந்துஇனிது அருந்தலும் பைங்கூழ் விளைத்தலும் | | வேளாளர்க்கு ஆக்கம் என்பது துணிவே. |
|
தொழில்முயற்சியில் சுறுசுறுப்புடன் தொடர்ந்து ஈடுபடும் மனஎழுச்சி, ஒரு காரியத்தின் தொடக்கத்தையும் பின் விளைவுகளையும் சிந்தித்துஅறிதல், தம்மிடம் உள்ள பொருள்களை பலரோடுங் கூடித் தான் நன்கு நுகர்தல், பசிய பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்தல் ஆகியன வேளாளர்களுக்குச் சிறப்புத் தருவதாகும் என்பது உறுதி என்றவாறு. (638) |
106. | கழிஊன் வேண்டிக் கடைபடு குலத்துள் | | அஃதுஇழிவு ஆம்என்று அறிந்துஅற வெறுப்போன் | | ஆக்க வான்என்று அறைந்தனர் அறவோர். |
|
மேலோர்களால் இழிந்தது என்று ஓதுக்கப்பட்ட மாமிச உணவை விரும்பி அதன் காரணமாகவே இழிந்தவர்கள் என்று கூறப்படுகின்ற இனத்தாருள் ஒருவன் அவ்வூன் இகழத்தக்கது ஆகும் என உணர்ந்து அதனை முற்றிலும் வெறுத்து ஒதுக்குவான் ஆகில் அவனை அறநெறியில் நிற்கும் சான்றோர்கள் சிறந்தவன் என்பர் என்றவாறு. |
கழிஊன் வேண்டிக் கடைபடு குலம் என்ற சொற்றொடர் இவர் கருத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் |