பிறவியால் இழிந்தவர் அல்லர். ஊன் உணவால் கடைபட்டனர். அவரிடையே தோன்றிய ஒருவன் அக் குற்றத்தினின்று விடுபட்டுவிட்டால் அவனை இழிந்தவனாகக் கருதக் கூடாது. இழிவிற்குக் காரணமாகிய ஊன் ஒழிந்ததால் காரியமாகிய இழிவும் நீங்கிவிடுகிறது. இக் கருத்தையே மேலும் தெளிவாக இவர் பிறிதோரிடத்தில் “ஊன்உண்டு விற்பான் உதரத்துச் சேய் ஒருவன் தான் உண்ணாவிட்டால் தவறன்றே-மான் உண்கண் வேசி மகள் ஒருத்தி மெய்க் கற்பினள் ஆகில் ஏசிமறுக்க வொண்ணா தே”1 எனக் கூறியுள்ளார். இதனால் ஒருவருக்குப் பிறப்பால் இழிவு பெருமைகள் வருவதில்லை என்பதுவும் அவை முற்றிலும் பண்புகளாலேயே உண்டாகின்றன என்பதுவும் வலியுறுத்தப்பட்டன. (639) |
|
107. | புகர்மலிந்து இருகோடு ஏந்திப் பொறுப்புஎனப் | | பொலிந்துஎழு கால்எனப் புழைக்கையும் குறியும் | | வாலும் தரைதொடல் மதகரிக்கு உயர்வே. |
|
மத்தகத்தில் புள்ளிகள் மிக்கிருத்தல், மேல்நோக்கி வளைந்த இரு பெரிய தந்தங்களை உடைத்தாதல், மலையைப்போல் பெருமையையும் கருமையும் பெற்றிருத்தல், உட்டுளை பெற்ற துதிக்கை, ஆண்குறி, வால் ஆகிய மூன்று உறுப்புகளும் நிலத்தைத் தோய்வதாலே அவைகள் கால்களோடிணைந்து ஏழுகால்கள் உள்ளமைபோல் காட்சியளித்தல் ஆகியவை மதம் மிக்க ஆண்யானைக்குச் சிறப்புகளாம் என்றவாறு. |
“அடிக்கை கனத்து மதம்மொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி மடிக்கினும் மண்உறு கையது; செந்நிற வாயது; தேயா மதிதன்னை ஒடித்து இரு பக்கமும் வைத்தென மகரிகை ஒன்றிஒன்றி ஒன்னார்மெய் இடிக்கும் மருப்பது”2 எனத் துதிக்கை நிலந்தீண்டல், புகர்மலிதல், இருகோடுடைமை பிறராலும் கூறப்பட்டன. |
“கால்கோசம் கைவால்ஏழ் நிலம்தோய்ந்து”3 எனப் பிரபந்தத் திரட்டு கூறும். (640) |
|