புலம் என்ற சொல் பொறிகளால் ஒரு பொருளை நுகரும் தன்மையைக் குறிக்கும். “அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை” என்னும் குறளின் விசேடவுரையில் பரிமேலழகர், “புலம் என்றது அவற்றை நுகர்தலை”1 என்பதால் இதுதெளிவாகிறது. இப் புலம் என்ற சொல் ‘ஐ’ என்ற பண்புப்பெயர் விகுதி பெற்றுப் புலமை என வழங்கும். இதுவே இந் நூற்பாவில் கூறப்பட்டது. |
நூலறிவளவில் மட்டுமன்றிக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனாலும் ஒரு பொருளை அறிதலே புலமை என்பதைத் தெளிவாக்கவே “அறியும் தன்மை” எனப் பொதுச்சொல்லாற் கூறப்பட்டது. (644) |
3. | தேற்றம் தவறு மரபு செயல்வகை | | எனும்நால் வகைத்தாய் இயம்புதும் புலமையே. |
|
இப்புலமை இலக்கணத்தைத் தேற்றவியல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு பிரிவுகளை உடையதாய்க் கூறவோம் என்றவாறு. |
இவ் விலக்கணத்தின் தலைச்சூத்திரத்தால் தற்சிறப்புப் பாயிரம் கூறி, அடுத்த சூத்திரத்தால் புலமையாவது யாது என விளக்கி, மூன்றாவதாகிய இந்நூற்பாவால் இவ்விலக்கணம் இத்துணைப் பகுதிகளால் பிரித்து உரைக்கப்படும் என்றார். எனவே இம்மூன்று நூற்பாக்களும் புலமை இலக்கணத்தின் தோற்றுவாயாக அமைகின்றன. (645) |
I. தேற்ற இயல்பு |
தேற்றம் என்றால் தெளிவு எனப் பொருள்படும். அறிகருவிகளின் உதவியால் அறிந்தபொருளின் தன்மையை ஐயம் திரிபற இன்னதெனத் துணிந்து தெளிதலே தேற்றம் எனப்படும். இத் தெளிவு பருப்பொருள், நுண்பொருள் என்பனவற்றுள் எதைப் பற்றியும் இருக்கலாம். புலமை என்பதுவும் இதுவே. இது பற்றியே புலவர்கள் தெளிந்தோர் எனப்படுகின்றனர். |
|