எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தில் திரியாப் படர்ச்சி வழிபாடே” என்றும் விளக்குகிறது.1 (647) |
6. | அக்கரம் முதற்கொண்டு அணிஈறு ஆகப் | | பகரும் நூலும் பாவலர் முன்பில் | | கற்கை நலம்எனக் காண்பது கடனே. |
|
எழுத்து முதல் அணி முடியச் சொல்லப்படும் ஐவகை இலக்கணங்களையும் கவிதை இயற்றும் வன்மையையுடைய புலவர்களிடத்தே பாடங்கேட்டறிதல் அஃதில்லாதவரிடத்தே கேட்டலைவிடச் சிறந்ததாகும் என்னும் உண்மையை உணர்வது மாணவர்களுக்குக் கடமையாகும் என்றவாறு. |
படைப்பாற்றல் பெற்றவரே எழுத்து முதலானவற்றைத் தாமே கையாண்டுச் சொந்த அநுபவம் பெறுகின்றனர். குறிப்பாக யாப்பில் அவர்கட்கே ஓசை தெள்ளிதின் விளங்கும். கவிதை இயற்றுபவனின் பொருள்கோளும் சிறப்பாக இருக்கும். நூலும் என்பதிலுள்ள எச்சவும்மை இலக்கணங்களை மட்டுமன்றி இலக்கியங்களையும் என்பதனை உணர்த்த வந்தது. |
இலக்கியத்தைப் படைப்பாற்றல் மிக்கவரிடத்தும், இலக்கணத்தை அஃதற்ற மொழிவல்லாரிடமும் கற்கலாமோ என ஓர் ஐயத்தைத் தாமே எழுப்பிக்கொண்டு இரண்டையுமே கவிஞனிடத்திற் கற்றலே சிறப்பு என விடையளிப்பதாக அமைந்தது இந்நூற்பா. இவ்வியல்பு மாணவனைத் தானே நூல்களை இயற்றவல்ல ஆசிரியனாகப் பயிற்றுவிக்க வழி கூறுதலின் அதற்கு உறுதுணையாக முதலிலேயே கவிஞரிடம் கல்வி பயிலுக என்றார். (648) |
7. | நூலின் துணையினும் நூறுபங்கு அதிகம் | | தெய்வத் துணையாம் செழுந்தமிழ்க் கவிக்கே. |
|
|