புலமையிலக்கணம்442
வளப்பம் மிக்க தமிழ்மொழியில் கவிதைகளை இயற்ற விழைவோருக்கு இலக்கண நூல்கள் நல்ல துணைதான்; ஆனால் கடவுளின் அருளை நாடிப் பெறுதல் அதனைவிடப் பலமடங்கு உதவியானது என்றவாறு.
எடுத்த காரியம் எதுவானாலும் முட்டின்றிச் சிறப்பாக நிறைவேற இறையருள் வேண்டும். பொதுவான இந்த உண்மை கவிதை இயற்றுதலுக்கு மிகச்சிறப்பாகப் பொருந்தும் என்பது இவர் கொள்கை. இதுபற்றியே இவ்வாசிரியர் “மற்றோர் உடலிற் புகுவல் லமையும் கற்றோர் புகழ்கல் விமுதற் பிறவும் பெற்றோர் வலியன்று; பிறங்குமணிப் பொற்றோகைமயிற் புனிதன் தரலே”1 எனவும், “யாப்பு இயல்பு உணரினும் எடுத்த வண்ணம் பாடுமாறு அருள்வது பாரதி கடனே”2 எனவும் கூறியுள்ளார்.
(649)
8.கணபதி முருகன் கலைமகள் உமையவள்
 பரமன் பரிமுகப் பகவன் என்னும்
 அறுவகைத் தெய்வமும் அருந்தமிழ்ப் புலமைக்கு
 உரிய வாம்என்று உரைத்தனர் உணர்ந்தோர்.
விநாயகர், செவ்வேள், சரசுவதி, பார்வதி, சிவபெருமான் குதிரை முகத்தோடு ஹயக்ரீவ அவதாரம் எடுத்த திருமால் ஆகிய ஆறு தெய்வ வடிவங்களும் எளிதிற் பெறலரிதாகிய தமிழ்ப் புலமையைப் பெறவிரும்பும் ஒரு மாணவனால் உபாசிக்கத் தக்க உருவங்கள் ஆகும் என்று அநுபவபூர்வமாக அறிந்த பெரியோர்கள் கூறுவர் என்றவாறு.
முன் நூற்பாவில் தெய்வத்துணை வேண்டும் எனக்கூறிய ஆசிரியர் இச்சூத்திரத்தில் அதற்கு எவ்வடிவ வழிபாடு சிறந்தது என அறிவுறுத்துகிறார். அறுசமயக் கடவுளரில் சூரியனை நீக்கிவிட்டுக் கலைமகளைச் சேர்த்துக் கூறியுள்ளார். சூரியனை உபாசித்துத் தமிழ்ப்புலமை பெற்றதாக