குறைபடும் புலவோர் குற்றம் கூறுவர் என்றதனாலேயே நிறைமதிப் பாவலர் அங்ஙனம் செய்யார் என்பது பெறப்பட்டது. அவர் செயல் அடுத்துக் கூறப்படும். (653) |
|
12. | உண்மைப் புலவோர் உரைசெயும் உபாயம் | | நண்ணிக் கொள்வது நலம்மிகத் தருமே. |
|
மெய்யாகவே கல்வியும் அறிவும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒரு மாணவனின் முன்னேற்றத்தைக் கருதிப் போதிக்கின்ற வழிமுறைகளை அவன் கைக்கொள்வது மிகுந்த சிறப்பைத் தரும் என்றவாறு. |
புலமையும் சான்றாண்மையும் பெற்ற பெரியோர் ஒரு மாணவனின் எழுத்தில் பிழைகளைக் கண்டால் அவற்றை எடுத்துக் காட்டுவதோடமையாமல் மீண்டும் அத்தகைய பிழைகள் நேராமல் இருப்பதற்குரிய வழிகளையும் சொல்லித் தருவர். அப்பிழைகளைப் பெரிதுபடுத்தி மனச்சோர்வடையச் செய்யமாட்டார்கள். ஆதலால் அத்தகையோர் கூறும் யோசனைகளைக் கடைப்பிடித்தல் சாலச்சிறந்தது என்கிறார். |
செல்வ மிகுதி, அரசியல் அதிகாரம், பதவியில் உள்ளவர் துணை, மலிவான விளம்பரம் ஆகியவனவற்றுள் ஒன்றிரண்டின் துணையால் புலமை வாசனையே இல்லாத சிலரும் பெரும் புலவராகக் காட்சியளிப்பர். அத்தகைய போலிப் புலவர்களிலிருந்து முறையாக பயின்று, தெளிவான அறிவு பெற்றோரைப் பிரித்துக் காட்டவே உண்மைப்புலவோன் என்றார். (654) |
13. | தெய்வத் துதிவழித் தேறாப் புலமை | | நைவும் சிறுமையும் நாணமும் தருமே. |
|
இறைவனின் பொருள்சேர் புகழைப் பாடுவதன் வழியாகத் தேர்ச்சிபெறாத கவிதை புனையும் ஆற்றல் தளர்ச்சியையும் பழியையும் அவமதிப்பையும் உண்டாக்கும் என்றவாறு. |
|
தெய்வத்துதி எத்தனை கூறினும் முடிவுபெறாது ஆகலானும் அத்தெய்வத்தைப் பற்றிய பல வரலாறுகள் பாடுபொருளாக |
|