எடுத்துக் காட்டித் திருத்துவதால் சரியான கவிமரபு சிந்தையிற் பதியும். இவ்வாறு படிப்படியாகக் குற்றங்களைந்து குணம் பொலிய எழுதிப் பழகப்பழகத் தானே இனிய கவிதைகளை எளிதாகவும் விரைவாகவும் இயற்றும் திறமை உண்டாதல் உறுதி. (657) | 16. | நாடகம் கொச்சகம் ஆதிய தொட்டுப் | | பாடல் இனிதுஎனப் பகர்வது முறையே. |
| பதம் கீர்த்தனை எனப்படும் நாடகத்தமிழ்ப் பாடல்கள், நான்கு காய்ச்சீர்களானியன்ற கொச்சகக்கலிப்பா என்னும் இரண்டையும் முதலில் இயற்றத்தொடங்கிப் பழகுவது சிறப்பாகும் என்பது மரபு என்றவாறு. | நாடகப் பாடல்களில் பெரும்பாலும் உரைநடையே நீண்டு வருவதாலும், உலக வழக்கிலுள்ள வெண்சொற்களே பயில்வதாலும், பொருள்கோள் நேராக இருப்பதாலும், தளை முதலிய கட்டுப்பாடின்மையாலும் முதலில் அதனை இயற்றுக என்கிறார். இது கைவந்தபின் அடுத்து முழுச்சொற்களை அப்படியே அடுக்க வாய்ப்பாக அமைந்ததும், ஓரளவே திரி சொற்கள் தேவைப்படுவனவும், தளைக் கட்டுப்பாடற்றதும், எதுகை மோனை வரையறையும் எளிதாக அமைந்ததும் ஆகிய கொச்சகக் கலிப்பா பரிந்துரை செய்யப்படுகிறது. காய்ச்சீர்களால் இப்பா நடைபெறுதலின் தொகைகளின்றி விரிவாகவே எளிதில் பாடலாம். இந்த யாப்பில் கொண்டுகூட்டு போன்ற சிக்கலான பொருள்கோள்கள் இடம்பெறாமல், ஆற்றொழுக்கே பெரும்பாலும் கைக்கொள்ளப்படும், எனவே, தொடக்கநிலைப் பயிற்சிக்கு இது சாலச் சிறந்ததாம். | நாடகம் என்பதற்கு, “பல்லவத்து இருபங்கு அநுபல்லவமும், அதன்இரு பங்காம் சரணமும் தாளம் பிழையாது அமைத்து அதில் பேரின்பம்சொலிற் கீர்த்தனை என்றும்மற்று ஏனைய கிளத்தில் பதம்என வும்சொலல் பாவலர் வழக்கே”1 என்னும் இவர் மதம் பற்றிப் பொருள் கூறப்பட்டது. | |
|
|