புலமையிலக்கணம்450
இவ்வகைப் பாடல்களுக்கு முழுமையான இராக, தாள அறிவு இன்றியமையாது வேண்டப்படும். இல்லையெனில் வேறொரு இசையாசிரியர் உதவி தேவைப்படும். இந்நூற்பா மொழி நிலையில் கூறப்பட்டதாதலின் யாப்பியற் கண்ணோட்டத்தில் அவை மிக எளியன எனப்பட்டனவேயன்றி வேறன்று.
(658)
17.விருத்தப் பாநிலை தேறுமுன் கட்டளைக்
 கலித்துறை ஆதிய கழறுதல் பிழையே.
(ஒரே வகையான சீர்கள் அடுக்கப்படுவதால் உண்டாகும் ஆசிரிய விருத்தங்களின் யாப்பமைதியில் நன்கு தேர்ச்சி பெறுவதற்குமுன் கட்டளைக்கலித்துறை முதலிய பாவினங்களைப் பாட முற்படுதல் தவறாகும் என்றவாறு.
மா, விளம், காய் முதலிய சீர்கள் அனைத்தடிகளிலும் ஒரே மாதிரி வருதல் வேண்டும் என்பதுவும், எதுகை மோனை சரியாக அமையவேண்டும் என்பதுவும்தான் ஆசிரிய விருத்தங்களுக்கு விதி. இதற்குத் தளைபற்றிய கட்டுப்பாடு இல்லை. ஈரசைக் சீர்களை நிரம்பப் பெற்ற விருத்தங்களில் தொகு நிலைத் தொடர்களும் திரிசொற்களும் ஓரளவு அதிகமாகவே இடம்பெறும். எனவேதான் இது கொச்சகத்தை அடுத்துக் கூறப்படுகிறது.
கட்டளைக்கலித்துறை ஆதிய என்றது ஓரடிக்கு இத்துணை எழுத்துகளே அமையப் பெறவேண்டும் என்னும் கட்டளையமைந்த கலிவிருத்தம், கட்டளைக்கலிப்பா என்பனவற்றை. ஆசிரிய விருத்தங்களை இயற்றுவதைவிட இவை சற்றுக் கடினமானவை என்பதை அநுபவத்தால் அறியலாம்.
(659)
18.ஆசிரி யப்பா வதன்நிலை அறிந்துபின்
 கலிப்பா வெண்பா கழறத் தகுமே.
(பெரும்பாலும் ஈரசைச்சீர்களே நிறைந்தும் தன்தளையே மிகுந்தும் நடக்கும்) அகவற்பாக்களின் யாப்பமைதி நன்கு கைவந்தபின்பே (வெண்டளையன்றிப் பறிதளை சற்றும்