பயிலக் கூடாதன வாகிய) வெண்பா, வெண்டளைக் கலிப்பா போன்றனவற்றை இயற்ற முயல வேண்டும் என்றவாறு. |
இதற்கான காரணம் உரையிலேயே பெய்து கூறப்பட்டது. ஆசிரியப்பாவில் வெண்டளையும், ஒரோவழிக் கலித்தளையும் வரலாம். (“ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து”1 என்னும் அகவலடியில் தோற்றாது நிமிர்ந்து எனக் கலித்தளை பயின்றது காண்க) ஆனால், வெண்டளையால் வரும் பாக்களில் பிற தளைகள் மயங்கா. இதனை இவர் “சுத்தம்பொலிந்து தோம்அற ஒழுகலின் வெண்பா விற்குஇணை வேதியப் பெண்ணே”2 என்றார் பிறிதோரிடத்தில். எனவே, வெண்பாப் பாடுதல் சற்றுக் கடினமே. இதுபற்றியே ஒளவை மூதாட்டியும் “எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி” என்றார்.3 இவரும் ஏழாமிலக்கணத்தின், “இளமைப் புலவோர்க்கு இசையாது இகலி முதியோர் சிலர்க்கு முன்னும்முன் உதவல் வெண்பாப் போலும் வேறுஒன்று இன்றே”4 என்னும் நூற்பாவில் ஆரம்ப நிலையினர்க்கு வெண்பா யாப்புக் கடினமானது என்கிறார். (660) |
19. | வெண்பா அதன்நிலை விளங்கும் முன்னம் | | வண்ணம் பாடுதல் வழக்கம் அன்றே. |
|
வெண்பா யாப்பு விரைவாகவும் இயல்பாகவும் பிழையற ஒருவருக்கு வருவதற்கு முன்னால் அவர் சந்தக்கவிகளை இயற்றத் தொடங்குதல் மரபன்று என்றவாறு. |
வண்ணம் என்பது இவர் வாக்கில் சந்தக்கவிகளுக்கே உரிய பெயர். (இதனைத் தொல்காப்பியம், காரிகை கூறும் வண்ணத் தோடு குழப்பிக் கொள்ளலாகாது) வெண்பாவிற்கு வெண்டளை மட்டுமே பயில வேண்டும் என்ற ஒன்றே விதி. ஆனால், சந்தப்பாடல்களில் நான்கடிகளிலும் குறில்வந்த இடத்துக் |
|