குறிலும், நெடில்வந்த இடத்து நெடிலுமே வரும். ஓர் எழுத்து மாறினாலும் குழிப்புச் சிதைவு ஏற்படும். மெய்யெழுத்துகளிலும் மெல்லொற்று வந்த இடத்தில் மெல்லொற்றும். வல்லொற்று வந்த இடத்தில் வல்லொற்றுமே பயிலும். மேலும் அனைத்தடிகளிலும் எழுத்துகளின் எண்ணிக்கையும் குழிப்பிற் கேற்பக் கட்டளை பெற்றுவிடுகிறது. இத்தனைக் கட்டுப்பாடுகளுடன் எதுகை மோனை வழுவாமலும், பொருள் தொடர்பு சிதையாமலும் சந்தக்கவிதை இயற்றுதல் அரிய சாதனையே. அதன் அருமை பற்றியே பொதுவாக வெண்பா புலி என்ற ஒளவைப்பிராட்டி எக்கவியையும் நொடியில் பாடவல்ல. “ஆசுவலவர்க்கும் வண்ணம்புலிஆம்”1 என்று உம்மை கொடுத்துக் கூறினார். சேது சமசுதானப்புலவர்களிடம் இவர் “குலவ வெண்டளையின் மாண்பு எல்லாம் தேறுசீர் வண்ணம் கழித்த ஆபாசம் என்பது தெரிகிலீர் போலும்”2 எனக்கூறியதும் இதனாலேயே ஆகும். வண்ணத்தின் சிறப்பு இவரால் பிறிதோரிடத்தில், “உடுஇனத்து அரசுஎன மதியைக் கூறலும், கவி இனத்து அரசுஇன வண்ணச் செந்தமிழ் அதனைக் கூறலும் புரையும் அன்றே”3 என விளக்கப்பட்டுள்ளது. வண்ணம் பாடலே கவிதை இயற்றலின் நிறைநிலை என்பதை இவர் பல இடங்களில் கூறியுள்ளார். | இதுவரையில் தனிப்பாடல்களை இயற்ற எவ்வாறு பயில வேண்டும் எனப் படிப்படியாகக் கூறிவந்தவர் அடுத்த இரு நூற்பாக்களால் பனுவல்களைப்பற்றி அறிவுறுத்துகிறார். (661) | 20. | பிரபந் தத்தொகை பேசித் தேறிக் | | காவியம் பாடிற் கழிவு பாடாதே |
| மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் போன்ற சிற்றிலக்கிய வகைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு பெரிய காப்பியங்களை இயற்றத் தொடங்கினால் அவை சுவை குன்றாமலும் குற்றமற்றும் விளங்கும் என்றவாறு. | |
|
|