புலமையிலக்கணம்456
சாந்துணையும் கல்லாத வாறு”1 என்னும் மறைமொழிச் கிணங்க, “எவ்விதக் கவிகளும் பாடும் இருந்திறல்” வந்தவரும் நன்மாணாக்கர் எனப்பட்டனர்.
(665)
24.பாடம் எழுதலிற் பட்டோலை வாய்ப்பினும்
 தடையற ஒருவன் எழுதச் சாற்றல்
 அரிதாம்; அதுவரை அறிவுத் தன்மைப்
 புலமை ஆம்எனப் புகல்வது துணிவே.
ஒரு கவிஞர் தம் படைப்பைத் தாமே வரிவடிவில் எழுதுவதைவிட மற்றொருவர் எழுதும்படி தாம் இடையீடில்லாமல் கூறிக்கொண்டே செல்வது மிகவும் செயற்கரிய செயல் ஆகும். இந் நிலையை அடையும்வரை இவர் புலமை அறிவுத் தன்மையைச் சார்ந்தது என்று கொள்ளப்படும். (பிறகு அப் புலமை தெய்வத்தன்மை கொண்டது எனப்படும்)
தாமே எழுதும்பொழுது வரிவடிவைக் கண்களாலும் பார்ப்பதால் எதுகை, மோனை, அடியின் முடிவு முதலியனவற்றை எளிதில் அறியலாம். தாம் சொல்லச்சொல்ல மற்றவர் எழுதும் பொழுது ஆசிரியர் முழுப் பாடலையும் தம் நினைவிலேயே கருதி இயற்ற வேண்டும். இதற்கு மிக அதிகமான நினைவாற்றல் தேவைப்படுவதால் இது அரியது எனல் திண்ணம். அவ்வாற்றல் இறையருளாலேதான் வாய்க்கும் என்பது இந்நூலாசிரியரின் அழுத்தமான கொள்கை. எனவேதான், கடும்பயிற்சியாலும் ஊக்கத்தாலும் உழைத்துத் தமது படைப்பைத் தாமே எழுதுவது வரையான நிலையை அறிவுத்தன்மை உடையது எனவும், பொருளெச்சத்தால் பட்டோலை எழுதக்கூறுதல் தெய்வத்தன்மைத்து எனவும் கூறுகிறார். இது அடுத்த நூற்பாவில் விளக்கப்படும்.
ஒரு கவிஞர் சொல்லச்சொல் ஏட்டில் எழுதிக்கொள்வதையும், அவையில் ஒரு புலவர் விளக்கஉரை கூறக்கூற மூலபாடத்தை மட்டும் படிப்பதையும் “பட்டோலை பிடித்தல்” என்பர். புதிய கவிதைகளைக் கவனம் செய்து சொல்லச்