அறுவகையிலக்கணம்457
சொல்ல அவற்றைப் பிழையற எழுதத் தக்க வல்லமையுடையார் கிடைத்தலின் அருமை நோக்கி “பட்டோலை வாய்ப்பினும்” என உம்மை கொடுத்தார்.
இவ்வியல்பின் 14-ஆம் நூற்பாவிலிருந்து இதுவரையான 11 நூற்பாக்களில் ஒரு மாணவர் சிறந்த கவிஞராக மிளிர்வதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டன. நல்ல படைப்பாற்றல் மிக்கவரே இங்குக் கூறப்பட்டுள்ள நுட்பங்களை எடுத்துக்காட்டியும், மாணவரின் படைப்புகளைத் திருத்திக் கொடுத்தும் அவரை உயர்த்த முடியும். இக்காரணம் பற்றியே இவ்வியல்பின் 6-ஆம் நூற்பா “அக்கரம் முதற்கொண்டு அணிஈறு ஆகப் பகரும் நூலும் பாவலர் முன்பில் கற்கை நலம்எனக் காண்பது கடனே’ என விதிக்கிறது.
(666)
25.கால மழைஎனப் புதுக்கவி கழறலும்
 சொற்படி நடக்கக் காண்டலும் பிறவும்
 தெய்வத் தன்மைப் புலமை ஆமே.
கார்காலத்தே பெய்யும் பெருமழை போலப் புதிய செய்யுட்களை வரி வடிவத்தின் துணையுமின்றிக் கவனம் செய்து வாயாலேயே பொழிந்து தள்ளும் ஆற்றலும், வாக்குப் பலிதமும், இம்மை மறுமைப் பயன்களை அடைதலும் (தன்னுடைய அறிவினால் மட்டும் அன்றி) இறைவனின் திருவருளாலேயேகைவரப் பெறும். அதனால் இந்நிலை தெய்வத் தன்மைப் புலமை எனப்படும் என்றவாறு.
மடைதிறந்த வெள்ளமெனக் கவிமழை பொழிதல், வாக்குப் பலிதம் இவை தவத்தால் எய்தப்பெறும் சித்திகளாம். ‘சித்தியொடு கல்விஉற்றோர் களைத்தெய்வப் புலவர்என்பார்; நத்தியவாறு இயற்றும்வலி நண்ணினரைத் தவர் என்பார்; புத்திமலிந்து எக்கவியும் புகல்வாரைப் புலவர்என்பார் அத்தி வளைந்து உடுத்துஇலக்கும் அம்புவியில் மர்ந்தோரே”1 என்னும் இவர் வாக்கால் அறிவுத்தன்மை, தெய்வத்தன்மை பற்றிய இக் கொள்கை நன்கு விளக்கமாகிறது.
(667)