செந்தமிழ்ப் பரமாசாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதும் திகழ்தரற் பொருட்டே” என்ற பழம் பாடலையும், இவர் தம் புலவர் புராணத்தில், “எண்ணில் பல்பவந்து இயற்றமிழ்க் குறுமுனி தம்மை நண்ணி மாதவம் முயன்றுள நாவலர் தமக்கே விண்ணில் வாழ்கலை வாணிதன் மெய்யருள் விளங்கும்; புண்ணி லாமுதற் கதியினுட் புகுதலெய் திடுமே”1 எனக் கூறியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். (676) |
தேற்ற இயல்பு முற்றிற்று. |
II. தவறு இயல்பு |
தமிழ் மாணவர்களிடமும், புலவர்களிடமும் இருக்கக் கூடாதன ஆகிய பண்புகளை இவ்வியல்பின் 34 நூற்பாக்கள் தெரிவிக்கின்றன. இன்னின்னவை விலக்க வேண்டுவன என விதித்தல் இவ்வியல்பின் குறிக்கோள். இதன் இன்றியமையாமை முதற் நூற்பா உரையில் கூறப்படும். |
35. | சாராது ஒழிப்பரன் தவறுஇயல்பு உரைக்குதும்; | | பேரா நலம்எனப் பிணங்கவொண் ணாதே. |
|
தம்பால் எத்தகைய குற்றங்கள் அமைந்துவிடக் கூடாது என அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்காகத் தவறு இயல்பு ஆகிய இப்பகுதியைக் கூறுகிறார். இக் குற்றங்கள் ஒரு புலவரை விட்டு நீங்காமல் இருக்கின்ற பண்புகள் ஆகும் எனக் கருதி எம்மோடு மாறுபாடு கொள்ளல் சரியன்று என்றவாறு. |
“இவை இவை நலம் பயப்பன; ஆகவே கொள்ளத்தக்கன என்று மட்டும் உரைத்தால் போதாதோ? தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட வேண்டுமா?“ என்னும் ஐயத்தை அறுப்பதற்காக இவை தீமை எனத் தெரிந்துகொண்டால் தானே அவற்றை ஒழிக்கலாம்? அவ்வாறு எவ்வெவற்றைத் தள்ளவேண்டும் எனக் கூறவே இவ்வியல்பைத் தொடங்குகிறேன் என்கிறார். இது பற்றி யன்றே வள்ளுவனாரும் அழுக்காறாமை |
|