புலமையிலக்கணம்466
படிஆடும் சித்தி எட்டும்; இயம்பரிய தனிவீடும் இலங்கும்; இன்றேல் துட்டன் எனும் பெயர்கொடுத்துத் துன்பம் ஊட்டிச் சுடுகனலாம் நரகினிலும் தோய்க்கும் அன்றே.”1 எனக் கூறுவதை இங்கு அவசியம் இந்நூற்பாவுடன் இணைத்துச் சிந்திக்க வேண்டும்.
சமயக் கருத்துடன், ஆன்ம நோக்கத்தோடு, ஆழமான சிந்தனைக்காகக் கூறப்பட்ட இந்நூற்பாப் பொருளே பொதுவான உலகியல் நெறியில் எளிதாக அடுத்த நூற்பாவில் கூறப்படுகிறது.
37.எள்ளிடைப் புலமை இசையும் முன்னம்
 நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே.
எள்ளளவு கல்வியறிவு பெறுவதற்கு முன்பாகவே நெல்லளவு செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டியதோர் தவறு ஆகும் என்றவாறு.
“கற்றுதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்று உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள்”2 எனத் தமிழ் மூதாட்டி கூறியது மாணவரின் மனத்திருக்க வேண்டும் என்கிறார். செருக்குத் தோன்றினால் கல்வி வேட்கைக்கு இடமில்லை; எனவே வளர்ச்சியுமில்லை. உண்மையாகக் கல்வியை விரும்புபவர் சாந்துணையும் செருக்கின்றிக் கற்பார்.
(679)
38.காகப் புள்என இனத்தொடு கலாவாது
 ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே.
காகம் தன் இனத்தோடு கலந்து வாழ்வதைப் போலன்றித் தன் இனமாகிய பிற நாய்களையே வெறுத்துத் துரத்தும் நாய்க்குணம் படைத்த புலவர்கள் பலராவர் என்றவாறு.
ஒரு புலவர் ஒரு புலவரை மதிப்பதில்லை. இது கல்வியால்