உண்டான பெருமிதம் எனத் தவறாகவும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. ஆனால், இது தவறு என்கிறார் ஆசிரியர். உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதலே புலவர் தொழிலாக வேண்டும். இதனை இவர், “மிலைந்த கடம்பன்ன வியன்தமிழ்ப் பாவாணர் கலைந்து அலையாது ஒன்றுபடக் காட்டாய்”1 என முருகப்பெருமானிடம் ஒரு வரமாகவே யாசிக்கிறார். (680) |
39. | தமிழ்அறி புலவோர் தங்கள் உறவினும் | | பொருளுடை மன்னர் ஆதியர் பொய்உறவு | | உயர்புஎனக் காண்பான் ஒள்ளிய பனுவற் | | காரன் எனினும் கடைப்படும் அன்றே. |
|
தமிழ்ச்சுவையை உணரவல்ல அறிஞர்களின் நிலையான நட்பைக் காட்டிலும், பொருட்செல்வம் மட்டுமே பெற்று விளங்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வர் போன்றவரின் நிலையற்ற நட்பு சிறப்புடையது எனக் கருதும் ஒருவர் சிறந்த நூலாசிரியராக விளங்கினாலும் அவர் புலவரில் இழிந்தவரே ஆவார் என்றவாறு. |
மன்னர் ஆதியர் அறவு பொய்உறவு என்றதால் மற்றது மெய்உறவு என்பது பெறப்பட்டது. பொருளுடை மன்னர் ஆதியர் என்றது அறிவு வேட்கையற்ற செல்வர்களைக் குறித்தது. “பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார் கிழமை பிறிதொன்றும் கொள்ளார் வெகுளின்மன் காதன்மை உண்டே இறைமாண்டார்க்கு? ஏதிலரும் ஆர்வலரும்இல்லை அவர்க்கு”2 என்றபடி செல்வர்களின் செயல்கள் யாவும் தம் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே செய்யப்படுவனவாம். |
இந்நூல் 671-ஆம் நூற்பாவில் இதே கருத்து வேறு வாய்பாட்டான் கூறப்பட்டது. (681) |
|