புலமையிலக்கணம்468
40.தேறாப் புலவனைச் சிந்தை நோவப்
 படுத்தும் பாவலர் பதர்அனை யாரே.
ஓரளவு கற்றும் கல்வி நுட்பத்தை உணராத இளம்புலவர்களை மனச்சோர்வும் துன்பமும் அடையும்படித் தம் புலமையையும் செல்வாக்கையும் காட்டிவருத்துகின்றபெரும்புலவர்கள் உள்ளீடற்ற வெற்றுத் தானியம் போன்று பயனற்றவரே ஆவர் என்றவாறு.
“கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர்; கோகநகப் பூக்கண்டு கொட்டியும் பூவாது ஒழிந்தில”1 என்பதற்கேற்ப நாவலர்களிலும் பல படிநிலைகளில் உள்ளவர்கள் இருக்கின்றனர். மேல்நிலையில் இருப்பவர்கள் கீழநிலையில் உள்ளவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது.
(682)
41.சீரிய புலவர்தம் செஞ்சொல் திருடிப்
 பாழ்த்த புன்கவி பகர்வோர் பலரே.
செவ்வையாக அமைந்த சிறந்த புலவர்களின் சொற் றொடர்களை அப்படியே தாம் எடுத்தாண்டு இழிவான கவியாகப் பாடுகின்ற புலவர்கள் பலர் உள்ளனர் என்றவாறு. இச்செயல் பெருந்தவறாகையால் தள்ளத்தக்கது என்பது குறிப்பு.
செஞ்சொல் என்றது செம்மையான சொற்றொடர்களைக் குறித்தது. என்னை? சொற்கள் பொதுவானவை; தொடர்களே தொடுத்தவனுக்குரியவை ஆதலின், வெண் சொல்லைத் திருடவேண்டிய அவசியமின்மையாலும், கருஞ் சொற்களைத் திருட ஆற்றலின்மையாலும் பெரும்பாலும் செஞ்சொற்களே திருடப்படும். ஒரு பெருங் கவிஞரின் சொல்லாட்சி அவர் அமைத்துள்ள இடத்தில் காரணகாரியத் தொடர்பு, ஓசை இனிமை, பொருட் சிறப்பு முதலியவற்றால் சிறந்து விளங்கும். அச் சொற்றொடரைத் திருடிப் பாடப்படும் செய்யுளில் அச்