அறுவகையிலக்கணம்469
சிறப்புகள் அமையா. எனவே, பாழ்த்த புன்கவி எனப்பட்டது. ஒருகால் அது சிறந்த கவிதையாகவே இருப்பினும் அதன்உயிர் நிலை மற்றவன் படைப்பாக இருந்து இவரால் திருடப்பட்டதாதலால் செய்தவரின் தன்மையைச் செயப்படுபொருளின் மேலேற்றிப் பாழ்த்த புன்கவி என்றார் எனினும் ஆம்.
இந் நூற்பாவால் விலக்கப்படுவது, “முன்னோர் மொழி பொருளேயன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றும்”1 நன்மரபை யன்று. பிறர் சொற்களையும் கருத்தையும் தன்னுடையனவ எனப் பொய்யாகக் கூறும் இலக்கியக்களவே இங்கு இடம்பெற்றது.
(683)
42.துட்டப் புலவரைச் சோழன் வழுதி
 அன்ன மன்னர்தம் அவையிடைக் கொடுபோய்
 முறைப்படி வென்று மூளி ஆக்கான்
 செவ்விய புலமைத் திறம்பாழ் படுமே.
தம் கல்விச் செருக்கால் இளம் புலவர்களையும் பொது மக்களையும் துன்புறுத்துகின்ற கொடிய இயல்புடைய புலவர்களைச் சோழன், பாண்டியன் போன்ற தமிழறிவும் நீதி வழுவாமையும் ஒருங்கே பெற்ற அரசர்முன் நிறுத்தி அப் புலவர்களுடன் முறைப்படி வாதிட்டு வென்று அவர்களுடைய ஆணவத்தை ஒடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவருடைய சிறந்த புலமையாற்றலும் குறையுடையதாகவே கருதப்படும் என்றவாறு.
இந்நூலாசிரியர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். எனினும் தமிழ்நாட்டைத் தமிழ் மன்னர்களே ஆளவேண்டும் என்ற தன் விருப்பால் அன்றைய ஆட்சியாளர்களை மன்னர்களாகவே மதிக்கவில்லை. இது அங்கிலியரந்தாதி என்ற சிற்றிலக்கியத்திலும், வேறு பல இடங்களிலும் இவரால் தெளிவாக்கப்பட்டுள்ளது. பொன்முடி தரித்தவர் ஆளவேண்டிய நாட்டைத் தோல் முடி (தொப்பி) அணிந்தவர்கள் ஆட்சி