44. | முற்றும் பொறுத்தலும், மூக்கிற் கோபம் | | வைத்துத் திரிதலும் வண்டமிழ்ப் புலவர்க்கு | | ஆய தன்மைஎன்று அறையஒண் ணாதே. |
|
மற்றவர்களின் பழிச்சொற்கள் அனைத்தையும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சற்றும் வெகுளியின்றித் தாங்கிக் கொள்வதுதான் தமிழ்ப்புலவர்களின் இயல்பு எனலாகாது. அவ்வாறோ அடுத்தவர் அனைவர்பாலும் எப்போதும் சினத்தைக் காட்டுகின்ற முன்கோபத்தன்மையும் பண்பன்று என்றவாறு. |
புலவர்கள் தம் சினத்தை இடம், பொருள், ஏவல் அறிந்து காட்டவேண்டும் என்பது கருத்து. சினம் தவறுகண்ட இடத்தில் இயல்பாகத் தோன்றும். பிறகுதான் அது கான்றாண்மையால் பொறுக்கப்படும். இந்நூற்பாவில் அம்முறையில் கூறாமல் முறைமாற்றிப் பொறுத்தலை முன்னும், சினத்தலை அடுத்தும் கூறினார். இதனால், பொறுத்தலே சிறந்தது; ஆனாலும் அனைத்தையும் வரையறையின்றித் தாங்கிக் கொண்டே இருக்கவேண்டியதில்லை என்ற கருத்து பெறப்படுகிறது. (686) |
45. | காமக் கடலே கதிஎனக் கருதிப் | | போவார் புலமையிற் புண்ணியம் இன்றே. |
|
தம் தமிழ்ப் புலமையை வெளிக்காட்டக் காமச்சுவையை மிக விரித்தும், பச்சையாகவும் கொச்சையாகவும் பாடுதலே சிறந்த நெறியாகும் என நம்பி, அவ்வழியில் ஈடுபடுவோரின் புலமையால் அவர்களுக்கோ, நாட்டுக்கோ, மொழிக்கோசற்றும் ஆக்கபூர்வமான பயன் இல்லவே இல்லை என்றவாறு. |
ஈற்றிலுள்ள ஏகாரத்தைப் புண்ணியத்துடன் கூட்டிப் புண்ணியமே இன்று எனப் பொருள்கொள்க. இவ்வேகாரம் ஈற்றசை அன்று. |
இந் நூலாசிரியர் காலத்தும் அதற்குச் சற்று முன்னும் பின்னும் குறுநில மன்னர், நிலக்கிழார்கள், பெருஞ்செல்வர்கள் |