அறுவகையிலக்கணம்473
ஆகியோர்மீது எழுந்த-அகத்துறை என்னும் போர்வையில் அமைந்த - சிற்றிலக்கியங்களையும் தனிப்பாடல்களையும் பார்த்தால் இந் நூற்பாவின் இன்றியமையாமை தெற்றென விளங்கும். விரித்திலேன். மகாகவி பாரதியாரும் தன் சின்னச் சங்கரன் கதையில் இவ் வவல நிலையைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
(687)
46.தெய்வப் புகழும் சிறப்பும் செந்தமிழ்
 பொருத்தும்என்று உணராப் புலவர்புல் லியரே.
அழிவற்றதும் புனிதமானதும் ஆகிய கீர்த்தியையும், பெறுதற்கரிய வீட்டின்பத்தையும் தமிழ்ப் புலமையால் பெறலாகும் என்பதைப் புரிந்துகொள்ளாத நாவலர்கள் இழிந்தவரே ஆவர் என்றவாறு.
“இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாக இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி”1 எனப் புகழுக்கு விளக்கம் கூறுவார் பரிமேலழகர். எனவே, புகழ் என்ற சொல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூற்றையும் உள்ளடக்கி நின்றது. அப்புகழ் வீடடைவதற்குரிய முயற்சியையும் உடைய தாயிருப்பதைக் காட்டத் தெய்வப்புகழ் என்றார். எனவே, வீடும் அடங்கிய நான்கையும் உள்ளடக்கியவாறாயிற்று. சிறப்பு என்றது வீடுபேற்றைக் குறித்தது- “சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு”2 என்புழிப் போல. எனவே, தமிழ்க்கல்வி அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையும் அளிக்கும் சிறந்த சாதனம் என்பது பெறப்பட்டது.
இதனை உணராமல் பொருளீட்டவும், அதனால் இன்பந் துய்க்கவும் மாத்திரம் தமிழைப் பயன்படுத்துவோர் புல்லியர் என இகழப்பட்டனர். கல்வியால் வீடு பெறுதலை, “எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான் மொழித்திறத்தின்