முட்டறுப்பான் ஆகும்; மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூற் பொருள்உணர்ந்து கட்டறுத்து வீடுபெறும்”1 என்றதனாலும் அறியலாம். (688) | | 47. | மாய்வார்ப் போற்றி மகிழும் பாவலோர் | | வன்னச் சிவிகையில், வையகம் படைத்தோற் | | கழறும் பாவலர் கையோடு உயர்வே. |
| சின்னாள்இருந்து இறந்தொழிகின்ற மனிதர்களை அவர் தரும் பரிசில்களுக்காகப் புகழ்ந்து பாடி, அதனால் பெரும் வரிசைகளைப் பெற்றுக் களிக்கின்ற கவிஞர்களின் செல்வச் செழிப்பைக் காட்டிலும், தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தளித்த பரம்பொருளின் வள்ளன்மையைப் போற்றும் புலவரின் வறுமைநிலையே பாராட்டிற்குரியது என்றவாறு. | வன்னச் சிவிகையும், இரக்கும் கலமாகிய கையோடும் முறையே செல்வ, வறுமை நிலைகளைக் குறித்தன. மாய்வாரைப் போற்றுதலின் காரணமும், மகிழ்ச்சியின் காரணமும் உரையிற் பெய்து கூறப்பட்டன. வையகம் என்றது தனு, கரண, புவன, போகங்களுக்கும் உபலக்கணம். | “பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடு மின் புலவீர்காள்”2 “தருக்காவலா என்று புல்லரைப்பாடி தனவிலை மாதருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதர் ஆய் தருக்காக அலாநெறிக்கே திரிவீர் கவி சாற்றுமின்-பத்தருக்கா அலாயுதன் பின்தோன்று அரங்கர் பொற்றாள் இணைக்கே”3 என்பன போன்ற ஆன்றோர் மொழிகளை நினைந்து கூறப்பட்டது இந்நூற்பா. மனிதர்களைப் புகழ்ந்து பாடாமையையே பல புலவர்கள் சிறப்புத் தன்மையாகக் கருதினர் என்பதை, | |
|
|