“மனிதக் கவிமொழி யாமங்கை வாழ்மண வாளவள்ளல்புனிதக் கவிகொண்டு மாலை செய்தான்”1 என்னும் ஒரு சிறப்புப் பாயிரத்தாலும் அறியலாம். (689) |
48. | கொல்லல்,ஊன் சமைத்தல் ஆதிய விரித்துக் | | கழறுந் துணிவுடைக் கவிப்புல வோரைப் | | பேயர்என்ற உலகம் பெரிதுஇகழ்ந்த திடுமே. |
|
உயிர்களைக் கொலை செய்தல், மாமிசத்தை உணவாகத் தயாரித்தல் போன்ற இழிசெயல்களை மிகவும் பெருக்கிப்பாடுகின்றன. இரக்கம் இல்லாத புலவர்களை மேலோர் பேய்க் குணம் வாய்ந்தவர்கள் எனப் பழிப்பர் என்றவாறு. |
நூல்களின் தலையான நோக்கம் மக்களுக்கு நன்னெறி காட்டுதலேயாம். அங்ஙனமிருக்க “ஒன்றாக நல்லது கொல்லாமை”2 “செயிரிற் றலைப்பிரிந்த காட்சி£ர் உண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த ஊன்”3 என்னும் மறைமொழிகளைப் புறக்கணித்து நூல்செய்வோரை உயர்ந்தவர்கள் இழித்துக் கூறுவது இயல்பே. “கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையார்”4 என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவர் அப்புலை வினையைச் சிறப்பாக வருணித்துப் பாடுபவர்களைப் பேயர் என்கிறார். அடிப்படை ஒன்றே. |
இந் நூற்பா பரணிப்பிரபந்தத்தை எண்ணிச் செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் தான் பேய்கள் போர்க்களத்தில் ஊன் சமைத்தல் ஓர் உறுப்பாகவே இடம் பெற்றுள்ளது. பலவகையான பிரபந்தங்களையும் இயற்றியுள்ள இவ்வாசிரியர் ஒரு பரணி கூட இயற்றவில்லை என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும். |
திருமுருகாற்றுப்படையில், “மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் |
|