செய்து”1 எனக் கூறியதையே இவர் “பொன்சொர்க்க நாடு புரந்தோய்! செந்நீர்ப்புலைப் பூசைபுகல் வன்சொற் கவிக்கும் மலையிடித்தாய்”2 என்பது போல நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் சற்று இழிவாகக் கூறியுள்ளார். கந்தபுராணத்தைப் பற்றியும் பிறர் கூற்றாக, “ஈரமிலர் ஊன் சமைக்கும் இழிவைப் பெருக்கி இசைத்தான்” என்கிறார். (690) |
|
49. | புகலரும் பனுவற் பொற்பணம் கருதி | | விற்கத் துணிவது மேம்பாடு அன்றே. |
|
இயற்றுதற்கரியநூலை இயற்றி அதைப் பணத்திற்குவிலைப் பொருளாக்குதல் சிறப்புடைய செயல் ஆகாது என்றவாறு. |
இந் நூற்பாவும் செல்வர்கள் தரும் பரிசிலை உத்தேசித்து, “கல்லாத வொருவனைநான் கற்றாய் என்றேன்; காடறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்; பொல்லாத வொருவனை நான் நல்லாய் என்றேன்; போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்; மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை; வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்” என்றது போல மாய்வார்ப் போற்றும்செயலை விலக்கியதாகும். புலமை விலை மதிப்பற்று. ஆதலால், அதை விலை பேசலாகாது. (691) |
50. | அருமை அறியான் அவையிடைப் புகுந்து | | பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே. |
|
கல்வியின் அருமையையும், கசடறக்கற்ற தம் அருமையையும் உணரமாட்டாத ஒரு செல்வன் முன்சென்று தம் பெருமையைக் கூறுவதும், அவன் அறிந்து பாராட்டிப் பரிசில் வழங்குவான் என எதிர்பார்த்தலும் தவறாகும் என்றவாறு. |
|