அறுவகையிலக்கணம்477
“கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றம் தமதே; பிறிது அன்று”1 கல்லா அறிவின் கயவர்பால், கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே”2 என்றெல்லாம் ஆன்றோர் கூறியதுமிது.
தமிழ்ப் புலவர்கள் செல்வர்களைப் புகழ்ந்து பாடி அவர்களிடம் கைநீட்டிப் பரிசில் பெறுவதை இவர் இழிவாகக் கருதுகிறார். எனவேதான், அதனை விரித்துக் கூறாமல் ஏனையும் என்றார். சேக்கிழார் பெருமான் முத்தநாதன் செயலைப் கூறுமிடத்து, “பத்திரம் வாங்கித் தான்முன் நினைத்தவப் பரிசே செய்ய”3 - என்பதைப் போன்ற மரபு இது.
இவருடைய இக்கொள்கை புலவர் புராணத்தில் படிக்காசுப் புலவரைப் பற்றிக் கூறுமிடத்து, “தில்லை யம்பதிச் சிவன்படிக் காசளித் திட்டதாச் சிலர்சொல்வார்; எல்லை இன்றிய வூர் தொறும் அஃதுஇரந்தனன் என்பார் சிலர்; இன்னோன் சொல்லை வேட்டு அரன் அளித்திடில் காயலூர்த் துலுக்கன் ஆதியர்ப்பாடும் தொல்லை யன்னவற் றொடர்வுறாது எனத் தெளி தூயவர் சிலர்தாமே”4 என்றதாலும் வேறு பற்பல பாடல்களாலும் விளங்குகிறது.
(692)
51.கால வேற்றுமை கருதாப் புலவன்
 சீலனே எனினும் சிறுமை யினனே.
மாறிவருகின்ற காலப்போக்கின் இயல்பைச் சிந்தித்துப் பார்க்காத கவிஞர் சிறப்புடையவனாகவே இருந்த போதிலும் உலகின் அன்றைய சிந்தனையை உணராதவர் என்னும் குறையை உடையவர் ஆகிறார் என்றவாறு.
உலகில் காலம் செல்லச்செல்ல புதிய கருத்துகள் தோன்றுகின்றன. இதன் விளைவாகப் பழைய மரபுகள் தாமே மாறுகின்றன. அல்லது வலிய மாற்றப் பெறுகின்றன. இத்தன்மை