அறுவகையிலக்கணம்479
பூதமைந்தும் காரியமாம் பௌதிகமும் சீர்அருள்சித்து ஆடும் தினம்”1 என்னும் கொள்கைக் கிணங்கக் கூறப்பட்டது.
பருப்பொருள்கள் பூதங்களின் சேர்க்¬க்களால் ஆனவை எனில் அவை பகுதிகளை உடையன - அதாவது கண்டப் பொருள் என்பது ஒதுதலை. எந்த ஒன்றுபகுதிகளால் ஆயதோ அது நிலையற்றது; ஒரு நாளின்றேனும் ஒரு நாள் அழிந்துவிடும் என்பது தத்துவநூற் கொள்கை.
நிலையாமையை உணராதவருடைய புலமை முழுப் புலமையன்று என்பது இந்த இரண்டாவது பொருள்கோளின் கருத்து.
(694)
53.கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்
 மண்டலத் தாரும் மதியார் அன்றே.
தாம் பாடத் தொடங்கிய துறையைத் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் யாருமே அவரைப் போற்ற மாட்டார் என்றவாறு.
அகத்துறையோ புறத்துறையோ எதுவாக இருப்பினும் அல்லது இலக்கணம், தத்துவம் முதலிய அறிவுத்துறைகளில் எதுவாக இருப்பினும் சொல்ல வந்ததைக் குற்றமில்லாமலும் தெளிவாகவும் சொல்லவேண்டும். அதில் தவறு இருந்தால் அறிஞர்கள் மட்டுமல்ல - பாமரர்களும் மதிக்கமாட்டார்கள் என்பது கருத்து. மண்டலத்து ஆரும் மதியார் எனவும், மண்டலத்தாரும் மதியார் எனவும் இரட்டுற மொழிதலாகக் கொள்க. பின்னது ஆகுபெயராகி மிகுதிபற்றிப் பாமரரை உணர்த்திற்று. அன்றே-ஈற்றசை.
(695)
54.அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை
 மருட்சி யினதுஎன வையப் படுமே.
திருவருள் வலிமை பெற்றுள்ள பெரியவர்களுக்குக் கூட