புலமையிலக்கணம்480
பயப்படாத புலமைச்செருக்கு அறிவுமயக்கத்தின் விளைவாகக் கருதப்பட்டு நல்லோரால் பழிக்கப்படும் என்றவாறு.
கல்வியும், வாக்கு வன்மையும் சற்றும் சந்தேகமில்லாமல் மிக உயர்ந்த செல்வங்களே ஆகும் என்றாலும் திருவருளை மாதவத்தால் பெற்றவர்களின் ஏற்றம் இவரினும் மேம்பட்டதாகும். எனவே, அருளாளரிடத்தில் புலமையோர் பயப்படுதலே முறையாகும். அவர்பால் அச்சமின்மை “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”1 என்பதற்கேற்ப அறிவின்னமையேயாகும். அதுவே மருட்சி எனப்பட்டது. வசைகவி யாண்டானைப்பற்றிக் கூறும்போது இவர், “வாக்குவலி வெகுவாகப் பெற்றுஅரிய வண்ணம்எட்டும் வழங்கு வார்க்கும் ஆக்குவதும் அழிப்பதுவும் பெறல்அரிது என்று உணர்ந்தோரே ஆண்டான் சொல்போய்த் தாக்கும்அதி சயம்அறிவார்; தவம்சிறிதும் முயலாராய்த் தருக்கம் கற்றுப் போக்குவரவு உணராமல் புலம்பும்இளங் கவிஞர்உளம் புகுந்தி டாதே”2 என்றுரைப்பது இவண் நினைக்கற்பாலதாம்.
(696)
55.தவ்வா மெய்ப்புகழ் தலைக்கொளும் புலமைக்கு
 ஒவ்வா நெறியினை உறுத்தல்ஓர் தவறே.
குறைவின்றி அனைவராலும் போற்றப்படுதலைப் பெற விரும்பும் புலவன் ஒருவனுக்கு இடத்தாலும், காலத்தாலும் பொருந்தாததும், பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததும் ஆகிய வழிகளை மிகவும் வற்புறுத்திக் கூறுவது பெரிய தவறாக முடியும் என்றவாறு.
ஒவ்வாநெறி என்பது விரித்துரைக்கப்பட்டது. புலவனின் செயலைப் புலமையின் மேலேற்றிக் கூறியது உபசார வழக்கு. ஒருவனின் அறிவுரைகளைக் கடைப்பிடித்தல் இயலாததாயின் யாரும் அவன் மொழிகளுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். அவன் உரைகள் பயனில் கூற்றாக முடியும். எனவே, புகழ்பெற விரும்புமொருவன் மக்களால் எளிதில் கடைப்பிக்கக் கூடியனவற்றையே அவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு