அறுவகையிலக்கணம்481
இனிமையாகக் கூறவேண்டும் என்பது கருத்து. இனிமையை உறுத்தல் என்னும் சொல்லாற்றலாற் பெற்றாம்.
இனி ஒவ்வாநெறி என்பதற்கு நம் பண்பாட்டிற் கியையாத நெறிஎனில் அமையாதோ எனில் பண்பாட்டிற்குப் பொருந்தா தனவற்றைக் கூறுவது புலமையே அன்மையின் அமையாதென்க.
(697)
56.வீணே விரிப்பினும் விரித்தலைச் சுருக்கினும்
 மாணார் புலவோர் மதியார் அன்றே.
சுருக்கமாகச் சொல்லத் தக்கனவற்றைப் பயனின்றி மிக நீட்டி விரித்துக் கூறினாலும், விளக்கமாகக் கூறவேண்டிய இடங்களில் தெளிவு ஏற்படாத வண்ணம் மிகவும் சுருக்கமாகக் கூறினாலும் கல்விச் சிறப்பையுடைய அறிஞர்கள் போற்றமாட்டார்கள் என்றவாறு.
வீணே விரிப்பின் மிகைபடக் கூறல், வெற்றெனத் தொடுத்தல், நின்று பயனின்மை ஆகிய குற்றங்களுக்கு இடமாகும். விரித்தலைச் சுருக்கின் குன்றக் கூறல், மயங்கவைத்தல் என்ற குற்றங்கள் நேரும். எனவே, இக் குற்றங்களை நீக்கிச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், விழுமியது பயத்தல் என்னும் குணங்களை உடையனவாக ஏற்ற அளவறிந்து உரைக்க வேண்டும் என்பது கருத்து.
கீழ்க்கண்ட இவர் வாக்குகள் இங்கே ஒப்பிட்டுப்பார்த்தற் குரியனவாம். “இருந்ததற்கு ஒருபாட்டு அப்பால் எழுந்ததற்கு ஒருபாட்டு ஓதிப் பெருந்தொகைப் படுத்து வாரைப் பேதையர் வியந்து கொள்வார்; மருந்துறழ் கவியொன் றாற்பல் வான் பொருள் தெளிவாச் சொல்லும் திருந்தியற் பார தச்சீர் தெரிபவர் சிலர்தாம் அன்றே.”1 “தாரகன் தான் கந்தன் தன்பால் உரைத்தற்குறைத்தான்; வாரம்உடையாள் ஒரு பெண்மகளுக்கு அழுகை வளர்த்தான்; ஈரம்இலர் ஊன்சமைக்கும் இழிவைப் பெருக்கி இசைத்தான்; ஆரமலையோன் அருள்பெற்றதனைக்