அறுவகையிலக்கணம்483
வித்யாப்ரபல சாமர்த்ய வித்வசரபம் தர்க்கமிடு வோர்பற்களைப்பொடிப் பொடியாத் தகர்க்கின்ற வஜ்ராயுதம் சண்டாளரைப்பிளக் குங்கண்ட கோடாலி சார்ந்தவர்க் கொருகற்பகம் ஷட்சாஸ்த்ர பொக்கிஷம் காவ்யக் களஞ்சியம் தவவிஸ்வகுல சிரேஷ்டம் சம்ப்ரம வளம்பரவு தென்பழனி யம்பதித ழைக்கவரு சந்த்ரோதயம் தளசேது பதிசமஸ் தானமுதல் எங்குஞ் சபாஷென மதித்த ரத்னம் சற்சனர்கள் புகழ் மாம்பழக்கவிச் சிங்கத் தமிழ்ச்சக்கர வர்த்திநிருபம்”1 இது ஒரு பெருநிலக் கிழாருக்குத் தம் கல்விப் பெருமையைக் காட்டி வரைந்த கடிதப் பாடலின் முதலடியாகும். இதில் மிகப்பயின்று வந்துள்ள வடமொழிச் சொற்களால் இது தமிழ்ச் செய்யுளா அல்லது சமஸ்கிருத ஸ்லோகமாக என்ற ஐயத்தை உண்டாக்குகின்றது. எனினும், இது இவர் தம் இருமொழிப் புலமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தால் இடமறிந்து இயற்றியதால் கொள்ளப்பட வேண்டியதே ஆகும் எனலாம்.
பொதுவாகக் கூறுமிடத்து உணர்ச்சிக்கு முதன்மை தரும் கவிதைகள் சற்று எளிய நடையை உடையளவாகவும், புலமைத் திறத்தைக் காட்ட எழும் செய்யுள்கள் பிறரால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவாறும் இருக்கலாம் என்று கொள்ளலாம்.
(699)
58.தன்னுடைச் சமயத் தலைவனைப் பரவா
 நூல்வழிப் புலமை நுவல்களையும் தவறே.
ஒரு புலவன் தன் மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும்போது தாம் சார்ந்துள்ள சமயத்தின் தெய்வத்தையும் குருவையும் போற்றாத பிற சமய நூல்களைக் கருவியாகக் கொண்டு கற்பித்தல் பிழையாகும் என்றவாறு.
சமயத்தலைவன் என்பது அச் சமயத்தின் முதன்மைத் தெய்வம், சமயாசாரியர் என்னும் இருபொருளையும் தருகிறது. வேற்றுச் சமய நூலில் சில இடங்களில் இப்புலவரின் வழிபடு கடவுளோ அல்லது சமயாசாரியர்களோ அந்நூல் முறைக்கேற்ப