அடுத்துவரும் மரபியல்பு பெரும்பாலும் செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக்கொண்ட தமிழ் இலக்கிய வரலாறாகவே அமைந்துள்ளது. மொழி இலக்கணத்தில் ஒரு பிரிவாக அம்மொழி இலக்கிய வரலாற்றை எம்மொழியாளரும் எங்கும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை. இவரே புதுமையாக இவ்வாறு கூறுகிறார். எனவேதான் வகுக்குதும் என்றார். |
இந்நூற்பாவுடன் தவறியல்பு என்னும் இப்பகுதி நிறைவு செய்யப்பட்டு அடுத்த பிரிவாகிய மரபியல்பிற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது. (710) |
|
தவறு இயல்பு முற்றிற்று. |
|
முன்பே கூறப்பட்டது போல இவ் வியல்பு செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக் கொண்ட தமிழ் இலக்கிய வரலாறு ஆகும். இன்றைய இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் மிகப்பலர் இவ்வியல்பில் இடம்பெற்றுள்ள பல நிகழ்ச்சிகளை உண்மையாக நடந்த சம்பவங்களாக ஒப்பமாட்டார்கள். எனினும், சென்ற நூற்றாண்டில் தமிழகத்தே புலவர்கள் நடுவே வழக்கிலிருந்த பல செவிவழிச் செய்திகளை அறிய இவ்வியல்பு துணைசெய்யும். இவ் வியல்பின் ஒவ்வொரு நூற்பாவும் ஒவ்வொரு கதையைத் தன்னுள் அடக்கி இருத்தலின் ஒவ்வொன்றையும் விரித்து எழுதினால் இவ்வுரை மிகப் பெருத்துவிடும். எனவே, இதற்குச் சுருக்கமாகவே உரை வரையப்படும். இதில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே நூலில் பார்க்க விரும்பும் அன்பர்கள் இந் நூலாசிரியரால் இயற்றப்பட்டதாகிய புலவர் புராணத்தைப் பார்க்கவும். |
இவ் விலக்கண நூலில் இக் கதைகள் ஒரு தனி அதிகாரமாகக் கூறப்படுவதன் காரணம் இதே இயல்பின் முப்பதாம் நூற்பா உரையிலும் இறுதி நூற்பாவிலும் கூறப்படும். |
இவ் வியல்பு முப்பத்தைந்து நூற்பாக்களை உடையது. |
69. | தெய்வமும் புலமைத் திருஉரு வாம்என்று | | அறியும் பெரியோர்க்கு அவர்தம் இணையே. |
|