“கண்டாயோ மீனவா கானகத்துக் கள்ளியின்கீழ் வெண்டாழை பூத்து விளக்கெரிய - ஒண்டொடியாள் வாழ்க்கைப் படுமுன்னே மைந்தனையும் பெற்றெடுத்தாள் காக்கைகளை ஒட்டுகின்ற கை”1 என்பது அப்பாடல். (713) |
72. | விழுந்த துளிஎனப் பூமாது எனஇரு | | தொண்டர்முற் பாடியது அன்றி யொருவற்கு | | அறிவே நனவுஎன்று அறைந்துஎன் கனவினும் | | பற்பல பாடல் பகர்ந்துஇனிது ஆண்ட | | முருகப் பெருமான் முழுதுணர் புலவனே. |
|
பொய்யாமொழிப் புலவர்முன் வேடனாகச் சென்று “விழுந்துதுளி அந்தரத்தே” எனத் தொடங்கும் பாடலையும் பகழிக்கூத்தருக்கு அடியெடுத்துக் கொடுக்கப் “பூமாது” எனவும் பாடியதோடு அருணகிரி நாதருக்கு ‘அறிவை அறிவது அறிவு’ என உபதேசித்தும், என் கனவில் தோன்றிப் பல பாடல்கள் கூறியும் ஆண்டுகொண்டதால் முருகப் பெருமானும் முழுதறி புலவன் ஆகிறார் என்றவாறு.(714) |
73. | வெண்மலர்க் கமல மீதுவீற் றிருந்து | | எவர்எவர் கவிகளும் என்னது என்னும் | | நாவின் கிழத்தியும் “நாடா முதல்” என | | வெண்பா வொன்று விளம்பினள் அன்றே. |
|
வெள்ளைத்தாமரையில் இருந்துகொண்டு இவ்வுலகில் யாரெல்லாம் கவிதை புனைந்தாலும் அவை யாவும் என்னுடையதே எனக்கூறும் கலைமகளும், “நாடா முதல்” எனத் தொடங்கும் வெண்பாவைப் பாடினாள் என்றவாறு. |
“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவிற் பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் கூடாரை எள்ளுவன் மீன்உயர்த்த ஏந்துஇலைவேல் வேந்தனே வள்ளுவன் வாயதுஎன் வாக்கு” எனும் வெண்பாவை நினைந்து கூறியது இது. இதில் வேதம், பாரதம், திருக்குறள் யாவும் யான் பாடினேன் என வாணி கூறுவதாக அமைந்துள்ளமை காண்க. (715) |
|