அறுவகையிலக்கணம்495
74.பொருவரும் தமிழ்ப்பாப் புகலாப் பத்தே-
 னினரும் புலவோர் எனும்பெயர்க்கு இச்சித்து
 அணிந்து கொண்டமை அறிவும்அம் புவியே.
இணையற்ற தமிழ்க்கவிகளை இயற்றாத தேவர்களும் தாங்களும் புலவர்கள் என அழைக்கப்பட வேண்டும் என்னும் விருப்பத்தால் அப்பெயரைப் புனைந்து கொண்டார்கள் என்று அறிஞர்கள் அறிவார்கள் என்றவாறு.
புலம் என்ற சொல் அறிவு, ஐம்புலன் முதலிய பலவற்றை உணர்த்தும் ஒரு பலபொருள் ஒரு சொல் ஆகும். புலவர் என்ற சொல் அறிவை உடையவர்கள் என்ற பொருளில் கவிஞர்களையும், ஐம்புல இன்பங்களையும் ஆரத் துய்ப்பவர்கள் என்ற பொருளில் தேவர்களையும் சுட்டும். பாப் புனைதலாகிய புலமை இல்லாதபோதும் அவர்கள் அப் பெயரை அணிந்து கொண்டனர்; இது அத்தொழிலின் சிறப்பைப் காட்டுகிறது என்பது இவர் கருத்து. இது யுத்தி வாதம்.
(716)
75.முத்தமிழ்ப் புலமை முனிக்கோன் பாடலிற்
 பெய்வளைத் திருமகள் பின்தொடர்ந் தனளே.
அகத்தியர் பாடலுக்காக இலக்குமி அவரைப் பின் தொடர்ந்தாள் என்றவாறு.
இதில் குறிக்கப்பெற்ற வரலாறு இடம் விளங்கவில்லை.
76.சொந்நாப் புலவன் செப்பிய பாடலில்
 மாயவன் குடிபோய் வந்தனன் அன்றே.
முன்னொரு நாளில் திருமழிசையாழ்வார் பாடல்களுக்காகக் காஞ்புரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள திருமால் ஊரைவிட்டு வெளியேறியும் பிறகு மீண்டும் குடியேறியும் சொன்னவண்ணம் செய்தார் என்றவாறு.
இது “கணிகண்ணன் போகின்றான்” “கணிகண்ணன் போக் கொழிந்தான்” எனத் தொடங்கும் இரு தனிவெண்பாக்களை நினைந்து கூறியது. தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ள இவ் வரலாறு புலவர் புராணத்தில் மாற்றி உரைக்கப்பட்டுள்ளது.
(718)