புலமையிலக்கணம்496
77.என்பு பெண்ணாகவும், ஈனச் சமணர்
 வன்கழு ஏறவும், மறைக்கதவு அடைக்கவும்
 காழியூர்ப் புலவன் கழறினன் தமிழே.
சீகாழியில் தோன்றிய திருஞான சம்பந்தப் பெருமான் மயிலப்பூரில் பூம்பாவையின் எலும்புகளை மீட்டும் உயிருள்ள பெண்ணாகுமாறும், மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறுமாறும், திருமறைக்காட்டில் ஆலயக்கதவு அடைபடுமாறும் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.
(719)
78.நீற்றறை குளிரவும், நெடுங்கை வேழம்
 அஞ்சவும், கற்றூண் ஆழியில் மிதப்பவும்
 பைந்தமிழ்ப் பாடல் பகர்ந்தான் ஒருவனே.
ஒப்பற்றவராகிய திருநாவுக்கரசர் பல்லவன் தம்மை அடைத்த சுண்ணாம்புக்காளவாய் குறிர்ந்திருக்கவும், கொல்லும் பொருட்டு ஏவப்பட்ட யானை அஞ்சும்படியாகவும், தம்மைக் கட்டிக் கடலில் இட்ட கல் தெப்பமாக மிதக்கு மாறும் இனிய தமிழ்த் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.
(720)
79.பரமன் பாங்கன் ஆகவும், முதலை
 உண்ட பிள்ளை உயர்ச்சியொடு ஒளிரவும்
 நாவலூர்ப் புலவன் நவின்றனன் நன்றே.
திருநாவலூரராகிய சுந்தரர் சிவபெருமானே தம்முடன் தோழமை கொள்ளுமாறும், அவிநாசியில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலைக்கு இரையாகிய ஓர் அந்தணச் சிறுவன் உரிய வளர்ச்சியோடு மீண்டும் மீளுமாறும் மிக நன்றாகத் தமிழ்த் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.
சிவப்பிரகாஸர் சுந்தரர்பற்றிக் கூறுகையில் “படியிலா நின்பாட்டில் பரமன் நனிவிருப்பன்” என்றும், ‘செல்வத்திற் சிறந்த குபேரன் தோழனாயிருப்பதுபோல் கல்வியிற் சிறந்த