அறுவகையிலக்கணம்497
நின்னை விரும்பி இறைவன் தோழனாக்கிக் கொண்டனன்’1 என்றும் கூறவதை நினைந்து நவின்றனன் நன்றே என்றார். அன்றே என ஈற்றசையாக்கின் பொருட் சிறப்பின்று.
(721)
80.பல்நாடு உடையவன் பாண்டி நாடே
 உடையேன் என்னவந்து உரிமையோடு எழுதவும்
 வாதபூர்ப் புலவன் வழங்கினன் தமிழே.
திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவராகிய சிவபெருமானே தென்னாடுடையவராக வந்து தாமே உரிையோடு ஓலையில் எழுதும்படித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார் என்றவாறு.
(722)
81.பைந்துழாய் போலப் பத்துப் பாவலர்
 செப்பிய தமிழ்நூல் தேறிப் பற்பலர்
 விரசைக்கு அப்பால் மேவினர் அன்றே.
ஆழ்வார்கள் பதின்மர் திருமால் விரும்பிப் புனையும் துளசி மாலை¬யொத்து இயற்றிய நாலாயிர திவ்வியப் பிரபந்தமாகிய பாமாலைகளின் துணையால் கணக்கற்ற பாகவதர்கள் வைகுந்தப்பதவி அடைந்தனர் என்றவாறு.
“பத்துப் பாவலர் பைந்துழாய் போலச் செப்பிய” என இயைக்க. விரசை என்பது வைகுந்தத்திற்குச் செல்லும் வழியில் குறுக்கிடுவதோர் ஆறு.
(723)
82.மூவகைக் கழகத்து ஐயா யிரத்து
 நானூற்று முப்பத் தொன்பது புலவோர்
 வாழ்ந்தனர் எனப்பகர் மாந்தர் பலரே.
தலைச்சங்கத்தில் 4900 புலவர்களும் இடைச்சங்கத்தில் 490 புலவர்களும் கடைச்சங்கத்தில் 49 புலவர்களும் ஆக மொத்தம் 5439 சங்கப் புலவர்கள் முன்னாளில் தமிழாய்ந்தனர் என்று பலர் கூறுவார்கள் என்றவாறு.