புலமையிலக்கணம்498
சங்கப் புலவர்களின் தொகை. “நாற்பத் தொன்பது நான்கு நூறு அணைந்த தொண்ணூறு மேற்பத் தோடிவை பெருக்கிய தொகையராய் விளங்கி சூற்பட் டார்த்தெழு முகில்உறழ் சொற்றொனிப் புலவோர் ஏற்பட் டார்கண்முச் சங்கமூ டென்னுமிவ் வுலகே”1 என்னும் இவர் கருத்தேபற்றி உரைக்கப்பட்டது. இறையனார் அகப்பொருள் உரையின்படி இத்தொகை முறையே 549,59,49 ஆக மொத்தம் 657 ஆகும்.2
இந்நூலாசிரியர் தாம் இதைக் கூறும் இரு இடங்களிலும் “எனப்பகர் மாந்தர் பலர்” எனவும், “என்னும் இவ்வுலகே” எனவும் பிறர் கூற்றாகவே கூறுகிறார். களவியல் உரையாசிரியரும் இச்செய்திகளைக் கூறுமிடத்து ‘என்ப’ ‘என்ப’ என்றே கூறிச் செல்கிறார். இதனால் தொல்லாசிரியர்களுக்கே முச் சங்க வரலாற்றைப்பற்றிய உறுதியானதொரு கொள்கை-தன் கூற்றாகவே ஆணித்தரமாகச் கூறுமளவில்-இல்லை என்பதை உய்த்துணரலாம். பெருந்தொகையின் 1384, 1385, 1386 ஆகிய மூன்று தனிப்பாடல்களையும் காண்க.
(724)
83.பொற்றா மரையிற் பொருவரும் பொதுநூல்
 வைத்துவென்று அளிகூர் வள்ளுவன் புலமை
 தமிழுடைப் பலர்க்கும் தாய்எனத் தகுமே.
இணையற்றதும் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் எச்சமயத்துக்கும் ஒப்ப ஏற்றுக் கொள்ளத் தக்கதுமாகிய திருக் குறளை மதுரைப் பொற்றாமரைக் குளத்திலுள்ள சங்கப் பலகையில் வைத்துச் சங்கப் புலவர்களை வென்று மன மகிழ்ந்த திருவள்ளுவரின் புலமை தமிழ்வாணர்கள் அனைவருக்கும் அன்னையைப்போல் போற்றிப் பேணத்தக்கதாம் என்றவாறு.
(725)
84.படுபலா உருள்பனை பழம்தரப் பைந்தமிழ்
 பாடிய கிழவியும் பழுதுஇலா தவளே.
 வெட்டப்பட்ட பலா மரமும், துண்டிக்கப்பட்டு உருளும்