அறுவகையிலக்கணம்499
பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு.
இந் நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது.
(726)
85.மதுரைஊர்க் கடவுள் வையைக்கு அப்புறம்
 போய்வரப் படித்தான் புலவன் ஒருவனே.
குலேச பாண்டியன் தன் பனுவலைப் போற்றாததால் சினங்கொண்டு சொக்கநாதப் பெருமான் ஆலவாயைவிட்டு நீங்கி வையையின் தென்கரையிலே கோயில்கொள்ளவும், பிறகு தன் சினம் தணிந்ததும் மீண்டும் ஆங்கு எழுந்தருளவும் இடைக்காடர் தமிழ்ப்பாப் புனைந்தார் என்றவாறு.
இவ் வரலாறு திருவிளையாடற்புராணம் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் இடம்பெற்றுள்ளது.
(727)
86.தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்பது
 மாதவர் தன்னொடு மாளா வண்ணம்
 ஒருதமிழ்ப் புலவன் உரைபயின் றானே.
திருப்பரங்குன்றக் குகையில் கற்கிமுகி எனப்பெயரிய பூதம் தான் உண்பதற்காக அடைத்து வைத்திருத்த 999 பேர்களுடன் தாழும் இறந்துவிடாதவாறு நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடினார் என்றவாறு.
(728)
87.வேறுஇடத்து ஆறு விலகி ஓடவும்
 கல்உரு மகிழவும் கவிதை பாடினர்
 இருபுல வோர்என்று இயம்புநர் பலரே.
தாம் பாடிய திருவாமாத்தூர்க் கலம்பகக் கவிக்கேற்ப அவ்வூரில் பம்பையாறு வழிமாறிச் செல்லும்படியும், ஒரு குளக்