| 38. | கீழ்முக் காலொடு ருகரத்து ஈறு |
| | பொருந்தில் முந்திரி; ரகரத்து ஈற்றைக் |
| | குறைத்து மேலுற வலமா வளைக்கில் |
| | அரைக்கா ணிக்குறி யாகும்; முந்திரியில் |
| | கிடைவரை முதற்கொடு தள்ளிற் காணி; |
| | சுவ்வே அரைமா; கூஎனும் எழுத்தின் |
| | ஈற்றுக் கிடைவரை தள்ளிமேல் வலமா |
| | வளைக்கில் முக்காணி; பகரமே ஒருமா; |
| | முற்பகர் முக்கால் ஈற்று நிலைவரை |
| | தொட்டிட மேலா வளைத்துஓர் வரையினும் |
| | ஒன்றாது அவ்வரைக் குறுக்கா வலங்கொடு |
| | தொடுத்துஓர் நிலைவரை மேல்இடல் அரைக்கால்; |
| | வகரமும் இகரமும் ளுகரமும் கால்அரை |
| | முக்கால் எனப்படும்; அன்றிச் சிற்சில |
| | கூட்டெழுத் தாகிக் குலவும் ஆதலின் |
| | நவின்றிலம்; இவைதாம் நடுவலகு உறுப்பே. |