கரையில் இருந்த விநாயகரின் கற்சிலை தம் பாடலால் மகிழும் படியும் இரட்டைப் புலவர்கள் பாடினர் என்றவாறு. |
இவ் வரலாற்றைப் புலவர் புராணம் இரட்டைப் புலவர் சருக்கத்தில் காணலாம். கல்லுரு மகிழப் பாடியது “தம்பியோ பெண்திருடி” எனத் தொடங்கும் தனிப்பாடல். (729) |
88. | அம்பிகை அடிசில் ஆக்கி இடவொரு | | தண்டமிழ்க் கவிஞன் சாற்றினன் துதியே. |
|
கவிராஜ பண்டிதர் தான் காசிக்குச் சென்று மீளும் வரைச ஆறுமாத காலம் தன் மகளின் உருவத்தோடு உமாதேவியார் உடன் வந்து சமைத்து உண்பிக்கும்படி ஒரு துதிபப்னுவலை இயற்றினார் என்றவாறு, |
ஆதிசங்கரரின் சவுந்தரியலகரியை இவர் தமிழ்ப்பாவாக மொழி பெயர்த்தார், இவர் வரலாறும் புலவர் புராணத்தில் இவர் பெயரில் அமைந்த சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது. (730) |
89. | மலைமகள் வசம்அற மயிலுடன் அயில்வேள் | | கருதிய வயின்வரக் கவிதை கூறினன் | | ஒருபுல வோன்என்று உரைக்கும் உலகே. |
|
(அருணகிரிநாதர் பிரபுடதேவராயரின் விழிமுன் முருகப் பெருமானைத் திருவண்ணாமலை ஆலயத்தின் ஒரு தூணில் காட்டக் கருதினார். சம்பந்தாண்டான் என்பவனின் விருப்பத் திற்கேற்ப உமாதேவியார் முருகனை அவ்விடம் தோன்றாது தடுக்க முயன்றார்.) அருணகிரிநாதர் ‘அதலசேட னாராட’ என்னும் திருப்புகழால் பார்வதி தன் நிலை மறக்கவும் முருகப்பெருமான் தான் கருதிய இடத்தில் காட்சி தரவும் செய்தார் என்று உலகினர் உரைப்பர் என்றவாறு. |
இவர் இயற்றிய அருணகிரிநாதர் புராணத்தில் விரிவாகவும், புலவர் புராணத்தில் சுருக்கமாகவும் இந்த வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. (731) |
90. | செழியன் மனையொடு சிவிகை தாங்கவும் | | கழகப் பலகை கண்டு மறையவும் |
|