அறுவகையிலக்கணம்501
சிலைத்தலை அசையவும் செப்பும் புலமை
 பொய்யா மொழியினது என்னும் புவியே,
பொய்யாமொழிப் புலவரின் கவிதையாற்றல் தன்னைப் பல்லக்கிலேற்றிப் பாண்டியன் அவன் மனைவியோடு சுமக்கச் செய்தல், பொற்றாமரையிலே தோன்றாதிருந்த பழைய சங்கப்பலகை வெளிப்பட்டு மீண்டும் மறைதல், மண்டபத்திருந்த சங்கப் புலவரின் கற்சிலைகள் தம்மோடு இவர் ஒத்தவர் என்று ஒப்பித் தலையசைத்தல் போன்ற அதிசயங்களைச் செய்யவல்லது என்று மக்கள் மொழிவர் என்றவாறு,
இவ் வரலாறுகளும் புலவர் புராணத்திலும் தனிப்பாடல்களிலும் உள்ளன.
(732)
91.செவ்வேற் குருபரன் செம்பொற் பதக்கம்
 தருமாறு ஒருவன் சாற்றினன் தமிழே.
திருச்செந்திற்பெருமான் தான் அணிந்திருந்த பொற்பதக்கத்தைப் பரிசலாக அருளும்படிக் பகழிக்கூத்தர் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடினார் என்றவாறு,
(733)
92.வம்பன் ஒருவன்ஊர் மண்மழை அதனால்
 அழியஓர் புலவன் அறைந்தான் தமிழே,
திருமலைராயன் என்னும் மன்னனின் தலைநகரம் மண்மாரியால் நாசமடையும்படிக் காளமேகப் புலவர் தமிழ்க்கவி பாடினார் என்றவாறு,
இதன் விரிவைப் புலவர் புராணத்தில் காண்க,
(734)
93.மாங்கனி நிமித்தம் மடிபிடித்து இழுத்தோன்
 சாம்படி ஒருத்தன் தமிழ்படித் தானே,
வழியில் கிடந்தெடுத்த மாம்பழத்தைத் திருடியதாகக் கூறித் தோட்டக் காவலன் இடுப்பாடையைப்பற்றி இழுத்ததால் அவன் புரட்டாசி மாதத்தில் இறக்கக் கடவன் என்று சிவப்பிரகாசர் ஒரு வெண்பாவாற் சபித்தார் என்றவாறு,
“அடுத்துவரும் தொண்டனுக்கா” எனத் தொடங்கும் வெண்பா இதில் கூறப்பெற்றது,
(735)