புலமையிலக்கணம்502
94.வெள்ளியால் சமைத்த விலங்கு முறிபடத்
 தெள்ளிய பனுவல் செப்பினன் ஒருவனே,
வடமலையப்ப மன்னனால் இடப்பெற்ற வெள்ளிக் கைவிலங்கு தறித்துப்போகுமாறு சிறைவிடந்தாதி என்னும் திருச்செந்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதியைத் தென்குருகையூரைச் சேர்ந்த ஒரு வைணவர் பாடினார் என்றவாறு.
இவ்வரலாறு புலவர் புராணம் இருவயிணவர் சருக்கத்தில் முதல் 29 கவிகளில் கூறப்பட்டுள்ளது. இச்சிறைவிடந்தாதி அண்மையில் அச்சாகியுள்ளது.
(736)
95.சூரன்ஊர் நடுங்கும் தூதுஉடை ஒருவனைச்
 சேரன்ஊர்க்கு அனுப்பிச் செம்பொன் பெற்றுக்
 களிகூர்ந் தனன்ஒரு கவிப்புல வோனே,
சூரபதுமனின் தலைநகரமாகிய வீரமயேந்திரப் பட்டினத்தையே அச்சமுறச் செய்யும் தூதுவராம் வீரவாகு தேவரைத் தன் இளையவனாகப் பெற்றுள்ள முருகப் பெருமானைக் கந்தசாமிப் புலவர் என்னும் ஒரு பாண்டிநாட்டுக் கவிஞர் சேர மன்னனின் கனவில் பொருள் வேண்டித் தூது விடுத்துப் பயன்பெற்று மகிழ்ந்தார் என்றவாறு,
இவ்வரலாறு தமிழலங்காரத்தில் “ஈரம் பொருந்தத் தமிழாற் றுதிக்கும் எழிற்புலமைக் காரன் கலிறயச் செய்வது நாடிக்கதிர்அயிற்கை வீரன் தனது பெருமைஎல் லாம்விட்டு விட்டொருக்கால் சேரன் கனவி னிடைதூதன் ஆம்எனச் சென்றனனே”1 எனச் சுருக்கமாகவும் புலவர்புராணம் கந்தசாமிப்புலவர் சருக்கத்தில் ஓரளவு விரிவாகவும் கூறப்பட்டுள்ளது,
(737)
96.தில்லையூர்ப் பார்ப்பார் சேரும் இடத்துஒரு
 சொல்லைநன்று ஆக்கும் பொருட்டில் சூர்ப்பனகை
 கவிஞ னாவரக் கண்டான் ஒருவனே.