இந்நூற்பாவில் கூறப்பட்ட வரலாறு எதுவென விளங்கவில்லை, |
கந்தபுராண அரங்கேற்றத்தில் முருகப்பெருமான் ஒரு கவிஞனாகத் தோன்றித் “திகடசக்கர” என்னும் சொற்றொடருக்கு வீரசோழிய விதியால் அமைதி கூறியதாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் அந்நிகழ்ச்சி தில்லையிலன்றிக் கச்சியில் நடந்தது. தில்லைவாழந்தணர்கள் ஒரு சாவு வீட்டில் குழுமி இருந்த சமயத்தில் கம்பர் நாகபாசப் படலத்திலிருந்து ஒரு கவி கூறி இறந்தவனை உயிர்ப்பித்துத தம் இராமகாதைக்குச் சாற்றுக்கவி பெற்றதாகக் கூறுவர். இந்நிகழ்ச்சியி்ல் வேறு கவிஞன் வருவதில்லை. மேலும் “ஒரு சொல்லை நன்றாக்கும் பொருட்டு” என்பதுவும் இதற்குப் பொருந்துவதில்லை, (738) |
97. | மணிநா வொடுதிரை மறைவுஅற ஒருவன் | | கவிதை பாடிக் களித்திருந் தனனே. |
|
திருமந்திரத்தூர் எனப்படும் தூத்துக்குடிக் கோயிலின் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மணியின் நாக்கும், திருச்செந்தூர்ச் சந்நிதானத்தை மறைத்திருந்த திரைச்சீலையின் கயறும் அற்று விழும்படி வீரபாண்டியப் புலவர் செந்தமிழ் பாடி மகிழ்ந்திருந்தார் என்றவாறு, |
இந்நிகழ்ச்சிகள் புலவர் புராணம் வீரபாண்டியப்புலவர் சருக்கத்தில் உள்ளன. (739) |
98. | கோடி கோடி கொடியார் தலைபொடி | | யாகப் பாடினன் அந்தணன் ஒருவனே. |
|
பற்பல தீயவர்கள் மாயும்படி வசைகவியாண்டான் என்னும் ஒரு பார்ப்பான் கவிகளியற்றினான் என்றவாறு, |
வசைகவியாண்டான் வரலாறு புலவர் புராணத்தில் அவன் பெயருடைய சருக்கத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, அச்சருக்கத்தின் ஈற்றில், ‘அன்னவன்நா வினில்இருந்து விளையாடினாள்செயல்என்று அறிவார் சில்லோர்; இன்னவன்இக்கொடுமையெலாம் இயற்றினன்என் றேதுணிவுற்று இகழ்வார் பல்லார், என்னபயன் இதனால்உண் டாயஎனில் தமிழ்ப்புலவர் |