ஏற்றம் தானும் மன்னர்முத லோர்அவரிற் றாழ்ந்தவரே எனும்நிசமும் வயங்கல் தானே”1 எனக் கூறப்பட்டிருப்பது இவண் சிந்திக்கத்தக்கது. | இலக்கண நூலாகிய இதன்கண் தாம் புதுவதாகப் படைத்து மொழியும் புலமையிலக்கணத்தில் பல புலவர்களின் வரலாறுகளைக் கூறி வருகிறார். இலக்கணமாக அமையாது இலக்கிய வரலாறு போன்று விளங்குகின்ற இம் மரபியல்பில் இடம்பெற்ற கவிஞர்கள் அனைவரும் மன்னர் முதலோரிற் சிறந்தவர்கள் என்றும், தாமும் அத்தகைய அருட்புலமையையே தம் குறிக்கோளாகக் கொண்டு சோர்வின்றி முயலல் சிறப்பு என்றும் மாணவர்கள் உணரவேண்டுமென்பதே ஆசிரியரின் நோக்கம்., அது இவ்வியல்பின் இறுதி நூற்பாவில் கூறுப்படுகிறது. (740) | 99. | வைவார் பற்பலர் வணங்கலின் மகிழ்ந்தொரு | | பாவலன் மழைவரப் படித்தனன் தமிழே, |
| (சீநிவாசப் புலவர் என்னும் ஓர் அந்தணர் ஒரு முகமதியப் பெண்ணை மணஞ்செய்து வாழ்ந்திருந்தார். அதனால் மற்ற வேதியர்கள் அவரை வெறுத்து ஒதுக்கினர்., இவ்வாறு இருக்கும்போது ஒரு சமயம் மழைவளம் குறைந்தது. அந்நாட்டை ஆண்டுவந்த இசுலாமிய மன்னன் அந்தணர்களுக்கு நூறாயிரம் பொன்னளித்து, “நீங்கள் எப்படியாவது மழை பொழியச் செய்யவேண்டும், இல்லையேல் உம்மனைவரின் கண்களையும் தோண்டுவதுடன் ஊண் உண்ணவும் வைப்பேன்” என்று ஆணையிட்டான், மறையவர்கள் பலநாள் வருணசபம் செய்தும் மழை பெய்யவில்லை. தன்னிச்சையாக அங்குவந்த சீநிவாசப் புலவரின் உதவியை நாடினர்) முன் தன்னைப் பழித்தொதுக்கிய பல அந்தணர்களே தாம் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டபோது பணிந்து உதவிவேண்டியதால் பழம் பகைமை பாராட்டாது சீநிவாசப்புலவர், “மழை பெய்ய வேண்டும் வடிவே இரங்கி அருள்வாய்” என்ற கீர்த்தனையைப் பாடி மழைவரச்செய்தார் என்றவாறு, | |
|
|