இவ்வரலாறு, “வெங்கனற் கோப மிலேச்சர்தம் ஆணையில் மேவிநொந்து தங்கள்கண் வாழ்வது நாடிப் பெரிது தவித்தவருக்கு அங்கயற் கண்ணி அருளாள் ஒருவன் அறைந்ததமிழ் சங்கடம் தீர்த்தது அறியும்நெல் வேலித் தடாகம்ஒன்றே”1 என்ற கவியாலும் புலவர் புராணம் சீநிவாசப்புலவர் சருக்கத்தாலும் அறியப்படுகிறது. (741) |
100. | செந்தூர்த் திருஉரு திரும்பிப் பார்க்க | | அன்றொரு நாவலன் அறைந்தான் தமிழே. |
|
(இழிகுலம் எனப்படும் ஈளுவராகப் பிறந்ததால் ஆறுமுகப் புலவர் என்பவரைத் திருச்செந்தூரின் ஏழாந் திருவிழாவன்று இறைவன் திருவுலா வரும்போதுமுன்னே வரவொட்டாமல் தடுத்தனர். புலவர் வருந்தித் திருவுருவத்தின் பின்னால் போய் நின்று ஒரு கீர்த்தனை பாடினார்.) |
திருஉலாவாக எழுந்தருளும் திருச்செந்தூர்ப்பெருமானின் திருவுருவம் தன்னை நோக்கிப் பின்புறமாகத் திரும்பும்படி ஆறுமுகப்புலவர் என்னும் ஒரு கவிஞர் தமிழ்க் கீர்த்தனை பாடினார் என்றவாறு, |
“எப்பவு னத்துஎக் குலத்தோர்க ளேனும் இசைக்கரிய மெய்ப்புகழ்ச் சாதனம் பெற்றால் அமரரில் மேல்எனும்சொல் ஒப்புகி லார்நிந்தை ஆற்றாது அந் நாளில்ஒருபுலவன் செப்புசெஞ் சொற்றமி ழாற்செந்தில் வேலன் திரும்பினனே”2 எனத் தமிழலங்காரத்திலும் புலவர் புராணம் ஆறுமுகப்புலவர் சருக்கத்திலும் இவ் வரலாறு இடம்பெற்றுள்ளது, (742) |
101. | பட்ட புரசினில் பச்சிலை பறித்தும் | | நட்டதோர் வயலின் நடுமழை பெய்வித்தும் | | ஒருகவிப் புலவன் உய்ந்தான் அன்றே. |
|
தன்வீட்டின் அருகே இருந்து பட்டுப்போன புரசமரம் தழைத்து இலைகளைத் தருமாறும், மழைபொய்த்த ஒரு |
|