புலமையிலக்கணம்516
கற்கிமுகத் துடன்ஒருவன் கைவாள் ஏந்தி வலிமலிபாதகர்குல வேர் அறுப்பான் என்கை வருகாலம் நுவல்பனுவல் வார்த்தை அன்றோ”1 என இவர் ஓரிடத்தில் வினவுகிறார்.
கல்வியின் முடிந்த முடிவு வீட்டின்பமே என்பது சமய நூற்றுணிபு. “கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅற் எனின்” என்னுங்குறளுரையில் மணக்குடவர், “சொல்லினானே பொருள் அறியப்படுமாதலின் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும்” என்றதும் இது பற்றியே. இந்நூலாசிரியர் ஓர் உயிர் முக்தி பெறுவதன் முன்னம் திண்ணமாகச் சித்தியை-அதாவது செயற்கரிய அதிசங்களை இயற்றும் வல்லமையைப் பெறும் என்ற உறுதியை உடையவர், இதனை “சித்தியொன் றேனும் தெரியப் புரிந்திடான் முத்தியும் சாவேஎன்று உந்தீபற”3, “தேன்நேர்செந் தமிழ்ச்சுவை உண்டு அணிமா ஆதிச் சித்திமிகச் செய்துமனத் திருப்தி எய்தி மான்நேர்கண் ணார்கலவிச் சுகமும் கைத்து மறுபிறப்பில் லாதொழிந்தால் மாண்பினோரே”4 மங்கலம்இல் லாவிடினும் புருடற் சேர்ந்தால் மகப்பெறலாம் எனக்கருதும் மடநல் லாள் போல் சிங்கம்ஒல்கும் சரபம்நிகர் ஆண்மைச் சித்திச் செயலிழந்து முத்திபெறச் சிந்திக் கின்றோன் பங்கம் அறான்”5 “ஒருவன் இலட்சாதிகாரியவதன்முன் கோடீசுவரன் ஆகான் என்பது போல எப்படிப்பட்ட தவசியும் சித்தன் ஆவதன்முன் முத்தன் ஆவதில்லை”6 என்பனபோல மிகப்பல இடங்களில் வற்புறுத்துகிறார். எனவேதான் சமய நூல்கள் அனைத்தும் வீட்டின்பத்தைக் கல்வியின் பயனாகக் கூற இவர் சித்தியை வலியுறுத்துகிறார்.
(753)